கே ஜி எப் மாதிரி சிம்புவிற்கு போடவிருக்கும் பின்னணி இசை .

September 28, 2023 at 7:21 pm
pc

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சிம்பு 48’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

மேலும் இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் கேரக்டருக்கு தயாராக நடிகர் சிம்பு சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார் என்றும் தற்காப்பு கலைகளையும் அவர் பயின்று உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வேற லெவலில் இந்த படத்திற்காக அவரது கெட்டப் மாறி உள்ளது என்பதையும் சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் இருந்து பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘கேஜிஎஃப்’ படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர், ‘சிம்பு 48’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

கேஜிஎஃப்’ திரைப்படத்தில் பின்னணி இசையில் மாஸ் செய்த ரவி பஸ்ரூர், ‘சிம்பு 48’ படத்தின் பின்னணி இசையில் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website