கோடையில் குளுமையான நுங்கு உண்பதால் ஏற்படும் நன்மைகள்!

May 19, 2022 at 1:52 pm
pc

கோடை காலத்தில் நம் ஊரில் எளிதாக கிடைப்பது நுங்கு.நுங்கு சுவையானது மட்டும் அல்ல எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது .கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தையும் கொண்டுள்ளது.

  • 100 கிராம் நுங்கில் 92.69 கிராம் நீர்ச்சத்து ,0.64 கிராம் புரதம் ,0.10 கிராம் கொழுப்பு ,0.26 கிராம் உலோக உப்புகள் ,0.69 கிராம் சர்க்கரைச்சத்து ஆகியவை நிறைந்து உள்ளது .
  • வியர்க்குரு தொல்லையால் அவதி படுபவர்களுக்கு நுங்கு சாப்பிடுவதுடன் அதை வியர்க்குரு மேல் தடவி வருவது நிவாரணம் தரும் .மேலும் சரும எரிச்சல் ,சிவத்தல் போன்ற சரும பிரச்சனைகளுக்கு நுங்கை மேல பூசலாம் .
    கோடையில் அம்மை நோய்கள் பரவும் .நோய் தாக்கியவர்கள் இளம் நுங்கைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் ,குடலில் உள்ள புண்கள் ஆறும் .அம்மை வராமல் தடுக்க முன்கூட்டியே உதவும் .
  • நுங்கில் அதன் சதைப்பகுதியை மட்டுமல்லாமல் அதன் மேல் தோலையும் சேர்த்து சாப்பிடுவதால் முழுமையான சத்து கிடைக்கும். ஆனால் , சிறு குழந்தைகள் , வயதானவர்களுக்கு அது செரிமானம் ஆகாது . ஆதனால் நுங்கை மட்டும் கொடுப்பது நல்லது.
  • பசியை தூண்டுவதுடன் குமட்டலை கட்டுப்படுத்தி தண்ணீர் தாகத்தை போக்கும் . கர்பிணிகள் சாப்பிட ஏற்றது . கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் செரிமானக்கோளாறு , மலச்சிக்கல் , அசிடிட்டி பிரச்சனையும் சரி செய்யும் .
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website