‘கோட்’ நாயகி-டாக்டர், மிஸ் இந்தியா, பேட்மிண்டன் பிளேயர் ,நீச்சல் வீராங்கனை வேற லெவல் மீனாட்சி சவுத்ரி..!

April 9, 2024 at 10:52 am
pc

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான மீனாட்சி சவுத்ரி ஏற்கனவே பல்வேறு சாதனைகள் புரிந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரிடம் எத்தனை திறமைகள் ஒளிந்திருக்கிறதா? என்று அந்த தகவல்களை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பார்வதி நாயர் ஆகிய நான்கு நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களில் மீனாட்சி சவுத்ரி குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க வருவதற்கு முன்னர் அவர் ஒரு மாநில அளவில் நீச்சல் வீராங்கனை என்றும் அதேபோல் மாநில அளவில் பேட்மிண்டன் வீராங்கனையாகவும் சாதனை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி கடந்த 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் வென்றவர் என்றும் மேலும் அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் டாக்டர் படிப்பையும் முடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.பல் டாக்டர், மிஸ் இந்தியா, பேட்மிண்டன் பிளேயர் மற்றும் நீச்சல் வீராங்கனை என நான்கு திறமைகள் அவரிடம் ஒளிந்திருக்கும் நிலையில் அவர் தற்போது நடிகை மற்றும் மாடல் அழகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி சவுத்ரி குறித்த இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website