சாப்பிட துவங்கும் முன் ஒரு பிடி சாதத்தை வைப்பதற்கான காரணத்தை பற்றி தெரியுமா …?

December 24, 2022 at 12:09 pm
pc

இன்றைக்கும் பலர் சாப்பிட துவங்கும் முன், ஒரு பிடி சாதத்தை தனியே எடுத்து வைத்துவிட்டு சாப்பிடுவது வழக்கம். இதற்கான காரணங்கள் பலவும் உண்டு. அதனை சாஸ்திரப்படி அறிந்து கொள்வோம் வாருங்கள். உயிரினங்களுக்கு உணவளித்துவிட்டு மீதமுள்ள உணவை சாப்பிட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இதை ‘வைச்வதேவம்’ என்பவர், இந்த முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் சிறிதள வேணும் உணவளியுங்கள் என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதை ‘பஞ்சக்ராசீ’ என்பவர் முற்காலத்தில் நாம் உயர்வாழ்வதற்கு காரணமான உணவினை நமக்கு கிடைக்கச் செய்யும் தெய்வத்திற்கும், தேவதைகளுக்கும் நன்றி காட்டும் வகையில் அவர்களுக்கே அர்ப்பணம் செய்வது சாஸ்திரம் நடைமுறை.

எட்டு திசையிலும் தேவதைகளுக்கு ஐந்து கவளங்களாக அன்னத்தை அளிக்க வேண்டும். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், மனிதர்கள், கந்தவர்கள் ஆகிய ஜவருக்கும் ஐந்து கவளங்கள் இட வேண்டும். வேதம் ஓதுவோர், அரசர்கள், வியாபாரிகள், உழைப்பாளிகள், வேடர்கள் ஆகிய அனைவருக்கும் ஐந்து கவளங்கள் வைக்க வேண்டும்.

பூமியை பிளந்து வெளிவரும் செடி கொடிகள், வியர்வையில் தோன்றும் உயிரினங்கள், முட்டையிலிருந்து தோன்றும் உயிரினங்கள், கருப்பையில் இருந்து வெளியே வருபவை, மனதில் இருந்து தோன்றுபவை ஆகியவற்றிற்கு என ஐந்து கவலங்கள் வைப்பது நல்லது.

இவ்வாறாக கவலங்களை வைத்து வணங்கி சாப்பிட வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவே சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு உணவை இலையில் எடுத்து வைப்பதெல்லாம் அவரவரின் தனிப்பட்ட விருப்பமாகும். அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்க வேண்டும் என்ற தர்ம சிந்தனையுடன் இருப்பதே என்றும் நலமாக வாழ முடியும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website