சிம்புவை பார்த்து வியந்துபோன ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்!

August 5, 2022 at 4:29 pm
pc

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெந்து தணிந்தது காடு தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.

இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மாநாடு படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக் கட்சி போன்று வெந்து தணிந்தது காடு படத்திலும் ஐந்து நிமிட சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

லீ விட்டேகர் இந்நிலையில், இந்த சண்டைக் காட்சியை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேகர் இயக்கி உள்ளதாகவும் இதில் சிம்புவின் நடிப்பு குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு லீ விட்டேகர் “வாவ் சிம்பு” என்று பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website