சீனாவில் இருந்து வடக்கிற்கு கடலுணவு இறக்குமதி இடம்பெறாது!- யாழ்ப்பாணத்தில் தூதுவர் உறுதி.

November 6, 2023 at 6:42 pm
pc

சீனாவில் இருந்து எத்தகைய கடல் உற்பத்திகளையும் வடக்கு மாகாணத்திற்கு இறக்குமதி செய்யமாட்டோம் என இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஷெங் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொருள்களை வழங கி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் ,சீனாவில் இருந்த எத்தகைய கடல் உற்பத்திகளையும் வடக்கு மாகாணத்திற்கு இறக்குமதி செய்யமாட்டோம். சீனா உலக பொருளாதாரத்தில் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும். அங்கு சந்தை வாய்ப்பு உள்ளது. எனவே இலங்கை பொருட்களை ஏற்றுமதி செய்யவே எதிர்பார்கிறோம். அதேபோல் உங்களுடைய பொருட்களையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.எதிர்காலத்தில் சீன மூதலீட்டாளர்களையும்,சீன தொழில் துறையினரும் வடக்கு மாகாணத்தில் முதலீட்டை செய்வதற்கு ஆர்வமாக உள்ளார்கள். அதேபோல வடக்கு மக்களும் முதலீட்டாளர்களையும் தொழில் துறையினரையும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். தற்போது வழங்கும் உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும். இப் பொதி 7,000 ரூபாய் பெறுமதியானது.இதுமட்டுமன்றி 15 மில்லியன் ரூபா செலவில் பல திட்டங்களை முன்னேடுத்து வருகின்றோம் அவற்றில் 5 மில்லியன் உலர் உணவு பொருட்களுக்கும், 5 மில்லியன் மீனவர்களுக்கான கடல் உப கரணங்கள் கொள்வனவிற்காகவும் 5 மில்லியன் வீட்டுதிட்டங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும். சீனா தனது வல்லமைக்கு உட்பட்டு இலங்கை மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கும் என்றார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website