சுவையான கமர்கட்டு சாப்பிட இனி கடைக்கு போக வேண்டாம் .நம்ப வீட்டிலேயே சுலபமா செய்யலாமே..!!

தேவையானப் பொருட்கள்
தேங்காய் – 1 கப் (துறுவியது)
வெல்லம் – 1 கப்
தண்ணீர் – 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில், ஒரு கடாயில் துறுவியத் தேங்காயை நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு, அதே கடாயில் வெல்லத்தைப் போட்டு, அதில் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
- அது கரைந்தவுடன் அதை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டிக் கொள்ளவும்.
- பின், வடிக்கட்டிய வெல்லத்தை ஒரு கடாயில் விட்டுக் கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
- பிறகு, அதில் வறுத்தத் தேங்காய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- பின்பு, எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது, ஒரு நெய் தடவியப் பாத்திரத்தில் கொட்டவும்.
- பிறகு, கையில் சிறிது நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்.
இப்பொழுது, பள்ளி பருவத்தை நினைவூட்டும் கமர் கட்டு தயார்..