சூரிய கிரகணத்தில் செங்குத்தாக நிற்கும் உலக்கை!

October 27, 2022 at 4:15 pm
pc

உலக்கை எந்தப் பிடிமானமும் இன்றி செங்குத்தாக நிற்பதன் அடிப்படையில் பழைய காலங்களில் சூரிய / சந்திர கிரகணங்களைக் கணக்கிட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணத்தை காண முடியும். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.

பழைய காலங்களில், கிரகணம் நடப்பதைக் கண்டறிய உலக்கைகளை செங்குத்தாக நிறுத்தி வைப்பார்களாம். மற்ற நேரங்களில் பிடிமானம் இன்றி செங்குத்தாக நிற்காத உலக்கை, கிரகண நேரத்தில் மட்டும் செங்குத்தாக நிற்குமாம்.

கிரகணம் முடிவடையும்போது உலக்கை கீழே விழும் எனக் கூறப்படுகிறது. இப்போதும், கிராமப்புறங்களில் உலக்கைகளை நிறுத்தி கிரகணத்தை உணர்கிறார்கள்.

சூரிய கிரகணம் என்பது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு. இன்று தோன்றியுள்ள கிரகணம் பகுதி சூரிய கிரகணம் (partial solar eclipse) என அழைக்கப்படுகிறது. அதாவது, பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைக்கும் நிகழ்வையே பகுதி சூரிய கிரகணம் என்கிறோம். சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒன்றுக்கொன்று 5.1 டிகிரி கோணத்தில் சாய்ந்து தற்போது சூரிய கிரகணம் நிகழ்ந்து வருகிறது.

சூரிய கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க கூடாது என அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இதுவே சந்திர கிரகணத்தை நாம் கண்களால் நேரடியாகப் பார்க்கலாம். சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்ப்பது நம் கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, கிரகணத்தைப் பார்க்க சூரிய கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்போது கிரகணங்களை அறிய அறிவியல் பல நுட்பங்களைக் கண்டறிந்துவிட்டது.

இந்தியாவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரியத் துவங்கியது. சென்னையில் மாலை 5:14 மணிக்கு சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு நிகழ்ந்தது. சூரிய கிரகணகத்தைப் பார்ப்பதற்கு பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பழைய காலங்களில் கிரகணங்களை அறிய ஒரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். உலக்கையின் அடிப்பகுதி தட்டையாக இல்லாததால் அதை செங்குத்தாக எந்தப் பிடிமானமும் இன்றி நிறுத்தி வைக்க முடியாது. எனினும், சூரிய கிரகணத்தின்போது உலக்கை செங்குத்தாக நிற்கும். பழைய காலத்தில் கிராமங்களில் சூரிய கிரகணம் நிகழ்வதை உலக்கைகளை நிறுத்தி கண்டறிவார்கள். கிரகணம் முடிந்தவுடன் இந்த உலக்கைகள் தானாகவே கீழே விழுந்துவிடும்.

தமிழ்நாட்டின் பல கிராமங்களில் சூரிய கிரகணத்தின்போது, தாம்பாள தட்டுகளில் ஆரத்தி கரைத்து, உலக்கையை செங்குத்தாக நிறுத்துவார்கள். அந்த உலக்கைகள் கிரகணம் நீடிக்கும் வரை அப்படியே நிற்கும். சூரிய கிரகணம் தொடங்குவதையும், முடிவதையும் இதைக் கொண்டே கணக்கிட்டார்கள். தற்போதும் கூட சில கிராமங்களில் சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு உலக்கை வைக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கிரகணத்தின்போது நிலவும் அதிகமான புவி ஈர்ப்பு விசை காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் என இதற்கு காரணமும் சொல்லப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website