தங்கம் விலை குறைவு… சவரனுக்கு ரூ.432 சரிவு!!

தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில், இன்று அதிரடியாக ரூ.432 குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,626 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.61.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.