தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

November 21, 2022 at 7:22 am
pc
  • கிராம்பு உணவுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் பொருள் கிடையாது..! அது ஒரு மருத்துவ மூலிகையாகும்.
  • கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
  • இதனை காலை வேளையில் 2 எடுத்து கொள்வதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய பலன்களை தருகிறது.
  • காலையில் கிராம்பை உட்கொள்வது செரிமான பிரச்சினைகளுக்கு உதவும். கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறத. எனவே மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. மேலும், உங்கள் பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும்.
  • கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்புகளை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website