திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு!

August 25, 2023 at 9:46 pm
pc

தலைநகர் டெல்லியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை கூடுதல் செயலாளர் நீராஜா சேகர் தலைமையில் நேற்று இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. பொழுதுபோக்கு பட தேர்வுக்குழு தலைவர் கேத்தன் மேத்தா, பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களின் (குறும்படம், ஆவணப்படங்கள்) தேர்வுக்குழு தலைவர் வசந்த் எஸ்.சாய் உள்ளிட்டோர் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை அறிவித்தனர்.

இதில் சிறந்த படமாக நடிகர் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி- நம்பி விளைவு’ தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விருது அந்த படத்தின் இந்தி மொழி பதிப்புக்காக வழங்கப்படுகிறது. இப்படத்துக்கு தங்கத்தாமரை விருதும், ரூ.2½ லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இதைப்போல சிறந்த பொழுதுபோக்கை வழங்கிய பிரபல படமாக ஆர்.ஆர்.ஆர். படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆஸ்கார் விருதுகளை வென்ற திரைப்படத்துக்காக தங்கத்தாமரை விருதும், ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். 

இந்த படம் சிறந்த பின்னணி பாடகர், சிறந்த இசை, நடனம், சண்டைப்பயிற்சி ஆகிய பிரிவுகளிலும் விருதை வென்றுள்ளது. அல்லு அர்ஜூன் சிறந்த நடிகராக புஷ்பா-1 தெலுங்கு படத்துக்காக நடிகர் அல்லு அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விருதுக்காக வெள்ளித்தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இதேபோல் சிறந்த நடிகைக்கான விருது, கங்குபாய் கத்தியாவாடி என்கிற இந்தி படத்துக்காக நடிகை அலியாபட்டுக்கும், மிமி என்கிற இந்தி படத்துக்காக நடிகை கீர்த்திசனோனுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதுக்கான வெள்ளித்தாமரையையும், ரூ.50 ஆயிரத்தையும் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். 

சிறந்த இயக்குனருக்கான விருது கோதாவரி என்கிற மராத்தி மொழி படத்துக்காக இயக்குனர் நிகில் மகாஜனுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கீரவாணிக்கு விருது சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை புஷ்பா-1 படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத், ஆர்.ஆர்.ஆர். படத்துக்காக எம்.எம்.கீரவாணி ஆகியோர் பெறுகிறார்கள். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு… நாட்டு…’ பாடலுக்காக, படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருதை பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் கீரவாணிக்கு பெற்றுத் தந்துள்ளது. தமிழில் மரகதமணி என்ற பெயரில் ‘அழகன்’, ‘நீ பாதி நான் பாதி’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘கொண்டாட்டம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள கீரவாணி தேசிய விருது பெற்றதன் மூலம் இன்னும் பிரபலமாகி இருக்கிறார். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படங்களுக்கு நர்கீஸ் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நர்கீஸ் விருதுக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. கடைசி விவசாயி விருதுப்பட்டியலில் இந்த முறை தமிழ் திரைப்படங்கள் பெரிய அளவில் கோலோச்சவில்லை. பொழுதுபோக்கு படங்கள் பிரிவில் மொழிவாரியான படங்களில் எம்.மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி படம் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. 

இதற்காக தங்கத்தாமரையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இந்த படம் சிறப்பு குறிப்பீடு பிரிவிலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருது அந்த படத்தில் விவசாயியாக நடித்த, சமீபத்தில் இறந்த நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரவின் நிழல் பாடலுக்கு… இதைப்போல பொழுதுபோக்கு படப்பிரிவில் சிறந்த பின்னணி பாடகி விருது இரவின் நிழல் படத்தின் மாயவா சாயவா… பாடலுக்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட உள்ளது. அவருக்கு வெள்ளித்தாமரை விருதும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இது தவிர பொழுதுபோக்கு அல்லாத படங்கள் பிரிவில் பி.லெனின் இயக்கத்தில் உருவான சிற்பிகளின் சிற்பங்கள் படம் சிறந்த கல்விப்படத்துக்கான விருதை பெற இருக்கிறது. 

அதைப்போல கருவறை படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சான்றிதழுக்காக மட்டும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதக்கமும், ரொக்கப்பரிசும் கிடைக்காது. ஸ்ரீகாந்த் தேவா இந்த பிரிவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதுபோல டி.என்.கிருஷ்ணன் ‘போவ் ஸ்டிரிங்ஸ் டூ டிவைன்’ என்கிற படம் சிறந்த கலைப்படத்துக்கான விருதை பெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழ் படங்களுக்கு 6 விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. விருதுகள் பற்றி பொழுதுபோக்கு அல்லாத திரைப்படங்களின் தேர்வுக்குழு தலைவர் வசந்த் எஸ்.சாய் கூறியதாவது:- கதாசிரியருக்கு விருது 2021-ம் ஆண்டு விருதுக்காக குறைந்த எண்ணிக்கையிலான படங்களே வந்திருந்தன. கொரோனா காலமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

குறும்படங்களில் 153 படங்களே வந்திருந்தன. இதில் தமிழ் படங்களை எடுத்துக் கொண்டால் 4 படங்கள் மட்டுமே வந்திருந்தன. அதில் 3 படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறும்படங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வருகிற ஆண்டுகளில் இளைஞர்கள் கல்வி, கலாசாரம் உள்ளிட்ட 24 பிரிவுகளில் குறும்படங்களை எடுத்து அனுப்பலாம். விருதுகளில் சிறந்த கதாசிரியருக்கான விருது இல்லை. அதை நாங்கள் ஒரு ஆலோசனையாக முன்வைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website