தெரிக்கவிடும் கமல் ரசிகர்கள் – கமல்ஹாசனின் அடுத்த ஐந்து படங்கள்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான “விஸ்வரூபம் 2” திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகளாகியும் அவரது படம் வெளிவரவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.இதனால் இந்த வருடம் வெளியான “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், “விக்ரம்” படத்தின் வெற்றியால் கமல்ஹாசன் தொடர்ந்து ஐந்து படங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கமல்ஹாசனும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், மேலும் மதுரையை மையமாக வைத்து உருவாகும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் விரைவில் இயக்கவுள்ளதாகவும், படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் ஆச்சரியத்தின் உச்சமாக கருதப்படுகிறது. அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ மற்றும் ’ஏகே 61’ ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத், கமல்ஹாசன் படத்தை இயக்கவிருப்பதாகவும், இது அரசியல் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் உலகநாயகன் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதை அடுத்து ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.