தொடரும் பதற்றம்: இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பலை கைப்பற்றியது ஈரான்!

April 14, 2024 at 3:32 pm
pc

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளன. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கப்பலை கைப்பற்றியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

போர்ச்சுகல் கொடியுடன் கூடிய எம்எஸ்சி ஏரீஸ் (MSC Aries) என்ற கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகத்தில் இருந்து இந்தியா செல்லும் வழியில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இது இஸ்ரேலிய பில்லியனர் இயல் ஒபர் (Eyal Ofer) மற்றும் அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் சோடியாக் குழுவின் ஒரு பகுதியான லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மரைடைமுடன் தொடர்புடையது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைராவிலிருந்து வடகிழக்கே 50 கடல் மைல் (92 கிமீ) தொலைவில் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான நீர்வழிப்பாதையில் “பிராந்திய அதிகாரிகளால்” ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கூறியது.

நவம்பர் பிற்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் மற்றொரு இஸ்ரேலிய கொள்கலன் கப்பல் ஆளில்லா விமான தாக்குதலில் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இந்த தாக்குதலை ஈரான்நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website