நடிகர் சத்யராஜின் தாயார் 94 வயதில் மறைவு

August 11, 2023 at 8:08 pm
pc

பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 

94 வயதில் இறப்பு  

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகரான சத்யராஜ் அடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சத்யராஜின் தாயார் நாதாம்பாள் கோவை ராம்நகரில் வசித்து வந்தார். இதனால் அவரை சந்திக்க சென்னையில் இருந்து அடிக்கடி கோவைக்கு சத்யராஜ் சென்று வந்துள்ளார். 

இந்த நிலையில் சத்யராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94. இதனை அறிந்த சத்யராஜ் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website