நடு இரவில் ஜிபி முத்துவை கதறவிட்ட சக போட்டியாளர்கள்: முதல் நாளேவா..!

October 10, 2022 at 6:14 pm
pc

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளன. டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்றைய தினம் கமலால் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் கரை ஒதுங்கினார். சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. படங்களிலும் நடித்து வரும் ஜி.பி, முத்து தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

முதல் போட்டியாளராக உள்ளே சென்ற முத்து தன்னுடைய வெகுளிதனத்தால் நேற்றைய தினமே கவனம் ஈர்த்தார். இந்நிலையில் ஜிபி முத்துவின் அட்ராசிட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஜிபி முத்து நன்றாக இழுத்து போத்தியபடி தூங்கிக் கொண்டிருக்க, ராபர்ட் அவரது காலை போய் ரகசியமாக பிராண்டி விட்டுவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.

தை சக போட்டியாளர்கள் பார்த்து சிரித்தபடி ரசித்து கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து தன்னுடைய படுக்கையில் இருந்து அலறியடித்தபடி ஜிபி முத்து கீழே விழுகிறார். அதன்பின்னர் சுற்றியுள்ளவர்கள் தன்னை பிராங்க் செய்வதை முத்து உணர்கிறார். உடனே மற்ற போட்டியாளர்கள் அவரை தூக்கிவிட்டு கட்டியணைக்கின்றனர். இந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website