நிர்வாண நிலையில் இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்த எம்.பி.

August 5, 2022 at 4:12 pm
pc

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் எம்.பி.யாக இருப்பவர் கோரன்ட்லா மாதவ் (45). இவர் கடந்த வாரம் இளம்பெண் ஒருவருக்கு நிர்வாண நிலையில் வீடியோ கால் செய்து 30 நிமிடம் வந்து சென்றால் உடற்பயிற்சி செய்து அனுப்புகிறேன் என கூறியுள்ளார். எம்பி பேசிய வீடியோ கால் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதனைக் கண்ட பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். இந்த நிலையில் அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் விசாரணை நடத்தினார். அப்போது கோரண்ட்லா மாதவ் அந்த வீடியோ காலில் இருப்பது என்னுடைய தலை மட்டுமே உடல் வேறு ஒருவருடையது. வீடியோவை மார்பிங் செய்துள்ளனர் என தெரிவித்தார். இந்நிலையில் வீடியோ கால் பேசியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோரண்ட்லா மாதவ் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website