பாலா படம் டிராப்பா?: சூர்யா வெளியிட்ட சூப்பர் தகவல்

May 26, 2022 at 5:52 pm
pc

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்திற்கு பிறகு அவரின் கெரியரின் போக்கே மாறிவிட்டது. மேலும் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் சூர்யாவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. 

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தற்போதைக்கு சூர்யா 41 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்பட்டது.

சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். இந்நிலையில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சனை என்று தகவல் வெளியானது. பாலா மீது கோபப்பட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் சூர்யா.

அந்த படம் கைவிடப்பட்டுவிட்டது என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் பாலாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, மீண்டும் செட்டுக்கு திரும்ப காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சூர்யா 41 படம் கைவிடப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. சூர்யாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் இது போதும் அண்ணா என்று சந்தோஷப்படுகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website