பிரபல நடிகருடன் படம் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

நடிகர் பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் தான் ‘இரவின் நிழல்’. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்து நடிகர் பார்த்திபனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் பார்த்திபனுடன் அமர்ந்து பார்த்துள்ளார். இதையடுத்து படம் முடிந்த பின்னர், ஒரே சிங்கிள் ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு வியந்து பார்த்திபனை புகழ்ந்தார்.