பிரியங்கா இரண்டாவது கல்யாணம்: மாப்பிள்ளை இவரா?

August 24, 2024 at 5:19 pm
pc

நடிகர் சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் வி.ஜேவாக இருந்து தற்சமயம் அதிக பிரபலம் அடைந்தவராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் மா கா பா ஆனந்த் போலவே இவரும் மிக பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதிகபட்சம் பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அடிப்படையிலேயே மிகவும் நகைச்சுவையாக இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றன. அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அதிகபட்சமான நிகழ்ச்சிகளை பிரியங்காதான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் பல காலங்களாகவே சின்னத்திரையில் பலம் வந்து கொண்டிருக்கிறார் மக்களை சிரிக்க வைப்பதில் திறமை கொண்டவர் பிரியங்கா என்பதாலேயே அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகரித்து வருகின்றன. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊஹும் சொல்றியா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் பிரியங்கா.

அதே போல நிறைய விருது வழங்கும் விழாக்களிலும் பிரியங்காவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் இருந்து வருகின்றன. பிரியங்கா ஜாலியாக பேசுவது மட்டுமல்லாமல் அவரது குரல் மிகவும் சத்தமாக இருக்கும். அவர் மைக்கை வைத்துக்கொண்டு பேச துவங்கி விட்டால் நான்ஸ்டாப்பாக பேசுவதை பார்க்க முடியும்.

சாதாரணமாக எல்லாராலும் அப்படி பேச முடியாது. அதுவே அவருக்கு ஒரு தனிப்பட்ட திறமை என்று கூறலாம். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் பிரியங்கா. அப்பொழுதும் அவருக்கு நிறைய வரவேற்புகள் கிடைக்க துவங்கின.

பிக்பாஸில் நிறைய சர்ச்சைகள் நடந்தாலும் கூட பிரியங்காவிற்கு அது ஒரு விளம்பரமாகதான் இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் தற்சமயம் போட்டியாளராக இருந்து வருகிறார் பிரியங்கா. சமையலிலும் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் பிரியங்கா நன்றாகவே சமைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்க்கும் பொழுது அது கொஞ்சம் கடினமான வாழ்க்கையாகதான் இருந்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டு அவர் காதலித்து வந்த பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணம் சில வருடங்கள் கூட நீடிக்கவில்லை. நான்கு வருடங்களிலேயே அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இது வெறும் வதந்தியே என்று கூறியிருந்தால் பிரியங்கா. ஆனால் சமீபத்தில் தொகுப்பாளர் அர்ச்சனா சில விஷயங்களை பேசும் பொழுது அதில் பிரியங்காவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை உறுதி செய்துள்ளார்.

ஆனாலும் பிரியங்கா இதுவரை இதுக்குறித்து வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் பிரியங்கா தனது தாய்க்காக இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. சீரியல்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website