ப்பா… இத்தனை கோடிகளா? அடுத்த படத்திற்கு கமல், விஜய் வாங்கும் சம்பளம்!

நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் விஜய் தங்களின் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம். பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலையும் வாரி குவித்தது. பிளாக் பஸ்டர் ஹிட்டான விக்ரம் படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது
பீஸ்ட்
இதேபோல் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூல் எந்த குறையும் வைக்கவில்லை என கூறப்படுகிறது. அதன்படி பீஸ்ட் திரைப்படம் 250 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.
சம்பளம்
இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் விஜய் தங்களின் அடுத்தப் படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இருவருமே 130 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
வாரிசு
தற்போது வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் இந்தப் படத்திற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும், தனது அடுத்த படமான 67வது படத்திற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் தனது அடுத்தப் படத்திற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2
நடிகர் கமல் ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவரது நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் அல்லது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என கூறப்படுகிறது.