ப்ளாக் வாட்டரில் இவ்வளவு நன்மைகளா?

September 18, 2022 at 10:39 am
pc

சமீப நாட்களாக குடிநீர் பற்றிய விழிப்புணர்வும் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நியூட்ரீஷியன்களால் அதிகமாகப் பேசப்படுகிறது. பல பிரபலங்களும், தங்களுடைய ஃபிட்னஸ் சீக்ரெட்டில் இந்த தண்ணீரும் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக ப்ளாக் வாட்டரை குடிக்கின்றனர்.

ப்ளாக் வாட்டர் நன்மைகள்

கறுப்பு ஆல்கலைன் தண்ணீர் சிறப்பு வாய்ந்தது. நம்முடைய உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கக்கூடியது.

மேலும், இதில் பி.எச் அளவு மிக அதிகம். நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சருமத்தைப் பாதுகாக்கக் கூடியது.

மனச்சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. இதுபோன்ற நிறைய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் உடல் சுறுசுறுப்பாக இயங்க போதிய ஆற்றலை வழங்குகிறது.

ஏன் குடிக்க வேண்டும்?

உடலில் அமிலத் தன்மை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. நிறைய மினரல்களும் பி.எச் அளவும் அதிகமாக இருப்பதால் உடலில் தேவையற்ற கழிவுகள் சேருவதைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, நம்முடைய உடல் மற்ற நுண்ணூட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கான ஆற்றலையும் இந்த ஆல்கலைன் தண்ணீர் கொடுக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website