மனத்தை சமநிலைக்குக் கொண்டுவர எளிதில் முடியுமா ..? அதற்கான பயிற்சி முறைகள் என்னென்ன …??

July 26, 2022 at 11:56 am
pc

1. முதலில் வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். தலையிலோ அல்லது நாற்காலியிலோ எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம்.

2. பிறகு மெல்ல கண்களை மூடிக்கொள்ளுங்கள். அவசரப்படாமல் மிகவும் இயல்பாக செய்யுங்கள்.

3. இப்போது காற்றை மூக்கின் வழியாக மெல்ல உட்சுவாசித்து பிறகு வாய்வழியாக வெளிவிடுங்கள். இப்படி நான்கைந்து முறை செய்யுங்கள். அப்படி காற்றை வெளிவிடும்போது “அமைதி, அமைதி, அமைதி” என்றோ அல்லது “Relax, Relax, Relax” என்றோ உள்ளத்துக்குள்ளேயே உச்சரியுங்கள்.

4. தற்போது உங்கள் காதுகளை நன்கு தீட்டிக்கொண்டு வீட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஓசையை கவனியுங்கள் (வாகனங்கள் உண்டாக்கும் ஒலி, மோட்டார் உண்டாக்கும் ஒலி போன்று ஆனால் வீட்டில் அம்மா சமையலறையில் உருட்டுகின்றபோன்ற ஒலிகளில் கவனம் செலுத்தக்கூடாது). ஆனால் காற்றாடி (Fan) ஓடும் சத்தம் போன்றவற்றைக் கேட்கலாம்.

5. அடுத்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். காற்று உட்சென்று வெளியேறும் ஒலியைக் கவனியுங்கள்.

6. இப்போது உங்கள் மனத்தில் எழும் எண்ணங்களைக் கவனியுங்கள். வருகிற எண்ணங்களை கட்டுப்படுத்த நினைக்காதீர்கள் (இதனால் விளையும் பயன்களை அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம்). உங்கள் அடிமனதில் அழுந்திக்கிடந்த தீண எண்ணங்களும், நிறைவேறாத ஆசைகளும், தோல்வி எண்ணங்களும் இன்னும் பலவும் பறந்து பறந்து வருவதைக் கவனிக்கலாம். ஓரிரு நிமிடம் எண்ணக்குதிரைகளை ஓடவிடுங்கள்.

7. மீணடும் சுவாசத்தை கவனியுங்கள். அடுத்து புற ஓசைகளை கவனியுங்கள். பிறகு மெல்ல இமைகளைத் திறந்து பாருங்கள்.

இந்தப் பயிற்சிக்கு 5 நிமிடம் போதுமானது. தினமும் தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்யுங்கள். யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியை செய்யலாம். எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் முக்கியப் பயிற்சியாகும். அயர்வு மேலாண்மையில் (Stress Management) இது ஒரு முக்கியப் பயிற்சியாகும். ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் எல்லோரும் பல்வேறு மனஅழுத்தங்களுக்கு (Tension) ஆளாகிறோம்.

அவற்றிலிருந்து விடுபட மிகச்சிறந்த மருந்தாக இந்தப் பயிற்சி உங்களுக்குப் பயன்படும்எப்போதும் மனம் சமநிலையில் இருந்தால் படிப்பது நினைவில் பதிவது மட்டுமல்ல பல்வேறு நோய்களிலிருந்தும், தினம் தினம் நமது அகவாழ்வில் புறவாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் நிகழாமலும் தவிர்க்கலாம். மனத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள பல்வேறு பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை எழுதினால் புரிந்து கொண்டு செய்வது கடினம்.

முறையாக செய்யவில்லை என்றால் பயன் இருக்காது. எனவே அவற்றை அறிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.குறிப்பாக, மாணவர்கள் கவனத்தை ஒழுங்குபடுத்த மேலும் ஓர் எளிய வழி இருக்கிறது. உட்கார்ந்து ஏதேனும் பாடத்தை சிறிதுநேரம் எழுதத் தொடங்குங்கள். அலைபாயும் மனம் உடனே உங்கள் கட்டுப்பாட்டில் வரும். பிறகு படிக்கத் தொடங்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website