மனைவியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து 400 கி.மீ எடுத்துச் சென்று கணவன்!

உத்தரபிரதேசத்தில் கணவன் மனைவியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்று உடலை எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ராக்கின்பூர் கெரி பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் அபிஷேக், தனது மனைவி வந்தனா அவஸ்தி (28) உடன் வசித்து வந்தார்.
இவர் சீதாப்பூர் சாலையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 27ஆம் தேதி தனது மனைவி வந்தனா அபிஷேக் காணாமல் போனதாக கோட்வாலி காவல் நிலையத்தில் டாக்டர் அபிஷேக் புகார் அளித்தார்.
காணாமல் போன தனது மனைவி வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் டாக்டர் அபிஷேக் கூறுகிறார்.
அபிஷேக் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அபிஷேக்குக்கும், பந்தனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
கணவர் அபிஷேக்கை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், பின்னர் அபிஷேக்கை அழைத்து அவர் மீது சந்தேகம் வலுக்க தீவிர விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையை சகிக்க முடியாத அபிஷேக், சண்டையின் போது மனைவியை அடித்ததாகவும், வந்தனா இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
மனைவியின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல், 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூர இடத்துக்கு தூக்கிச் சென்று தீ வைத்துள்ளார்.
இந்த கொலையில் அபிஷேக்கின் தந்தையும் பங்கேற்றதை அடுத்து அபிஷேக் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.