மாதவிடாய் காலத்தில் இரத்தம் கட்டி கட்டியா வெளிவருகிறதா…? கவலை வேண்டாம்…இதோ உங்களுக்கான டிப்ஸ் …!!

May 28, 2022 at 1:18 pm
pc

மாதவிடாய் என்பது அனைத்து பெண்களுக்கு தவிர்க்க முடியாது ஒரு விஷயம். இது சாதராணமாக இருந்தாலும் பல பெண்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. பீரியட்ஸ் நேரத்தில் தீராத வயிற்று வலி, உடல் சோர்வு, பிறப்பு உறுப்பில் வலி, கை கால் வலி, முட்டி வலி, அதிக இரத்த போக்கு, மற்றும் பல.. அந்த வகையில் ஒரு சில பெண்களுக்கு உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் கட்டி கட்டியாக வரலாம். இதனால் கூட வயிறு வலி ஏற்படும்.

இது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இருந்தால் பரவாயில்லை, தொடர்ந்து 7 நாட்கள் மாதவிடாயின் போது இரத்தக்கட்டிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இப்போது மாதவிடாய் இரத்தக்கட்டிகளை நீக்கும் இயற்கை வைத்தியங்கலை என்ன என்பதை பார்க்கலாம். இது இயற்கை பொருட்கள் சார்ந்தது என்பதால் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது…

டிப்ஸ் – 1

சிவப்பு ராஸ்பெர்ரி இலைகளில் ஃப்ராகரைன் இருக்கிறது. இது கருப்பை பிரச்சனைகளை குறைத்து ஹார்மோன்களை சமன்படுத்த உதவுகிறது.

ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சிவப்பு ராஸ்பெர்ரி சாறை சேர்க்கவும்.இதை அடுப்பில் வைத்து இளங்கொதி வந்ததும் இறக்கு வடிகட்டி ஆற வைக்கவும்.பிறகு இனிப்பு தேவைப்பட்டால் தேன் சேர்த்து குடிக்கவும்.

டிப்ஸ் – 2

கருப்பையை சுற்றி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மசாஜ் உதவுகிறது.

இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் இரத்தக்கட்டிகளை எளிதாக்கலாம்.

மாதவிடாய் காலங்களில் அழுத்தமில்லாத மென்மையான மசாஜ் செய்வது நல்லது.

டிப்ஸ் – 3

இஞ்சியை உடலுக்கு எடுத்துக் கொண்டால் அதிக இரத்த ஓட்டம் மற்றும் மாதவிடாய் நாட்களின் போது உறைதல் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

கொதிக்க வைத்த தண்ணீரில் இஞ்சியை மசித்து அதில் போட்டு, மீண்டும் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின் அதை இறக்கி, வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து தேநீராக்கி குடிக்கவும்.

தினமும் இரண்டு முறைக் குடிக்கவும்.

டிப்ஸ் – 4

பூண்டில் இருக்கும் கந்தகம் மாதவிடாய் கட்டிகளை போக்க உதவுகிறது.

தினமும் பூண்டை நாம் சேர்த்துக் கொள்கிறோம். அதற்கு பதிலாக பூண்டை பற்களால் மென்று சாப்பிட்டால் பலன் அதிகம் கிடைக்கும்.

பூண்டை சிறுதுண்டுகளாக நறுக்கி, தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர இரத்தக்கட்டிகள் குறையும்.

டிப்ஸ் – 5

பூசணி விதைகளில் பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா 3 பாலி அன்சாச்சுரேட்டர் கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன.

இது பீரியட்ஸ் காலத்தில் இரத்தக்கட்டிகளை எளிதில் குறைக்க உதவும்.

வறுத்த பூசணி விதைகள் இரண்டு டீஸ்பூன், தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website