முட்டை சாப்பிடாதவர்களுக்கு அதற்கு ஏற்ற இணையான சத்துள்ள உணவுகள்..!

May 30, 2022 at 2:56 pm
pc

சிலருக்கு முட்டை சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க, அதற்கு இணையாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னவென்று தெரிந்து சாப்பிட வேண்டும்.

ஸ்பைரூலினா:

ஸ்பைரூலினாவில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அதிலும் 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த ஸ்பைரூலினாவில் 8 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே இதனை சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம். வேண்டுமெனில் ஸ்பைரூலினா காப்சூல்களை வாங்கி தினமும் 2 சாப்பிடலாம்.


சோயா பீன்ஸ்:

1/4 கப் சோயா பீன்ஸில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே நீங்கள் சைவ உணவாளியாக இருந்தால், இதனை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் சோயா பீன்ஸ் கொண்டு மசாலா, குருமா செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.


சீஸ்:

பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கும். அதிலும் சீஸில் புரோட்டீன் இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சீஸை உணவில் சேர்த்துக் கொள்வது, அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.


பூசணிக்காய் விதை:

பூசணிக்காய் விதையில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்து மற்றும் மக்னீசியமும் அதிகம் உள்ளது. எனவே அதனை தினமும் சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது ஸ்நாக்ஸ் நேரத்திலோ எடுத்துக் கொள்வது நல்லது.


தயிர்:

அனைவருக்கும் தயிரில் புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியா உள்ளது என்று மட்டும் தான் தெரியும். ஆனால் அதில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே அன்றாடம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website