முதன் முறையாக தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்.

இளம்பெண் ஒருவர் தன்னைதானே திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத் மாநிலம் பரோடா பகுதியை சேர்ந்தவர் ஷாமா பிந்து(24). இவர் எம்,எஸ் பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார்.
இதையடுத்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப்போலவே ஜூன் 11ம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்திற்கே தயாராகி உள்ளார். இவரின் திருமணத்திற்காக பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் திருமணத்தில் நடைப்பெற உள்ளது.
இந்தியாவில் முதல் பெண்
இதற்காக சில உறவினர்களையும் அழைத்துள்ளார். மணமகனை தவிர அனைத்து நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகிறது. இந்தியாவில் பெண் தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல் முறையாக குஜராத்தில் நடைப்பெறவுள்ளது.
இதுகுறித்து ஷாமா பிந்து தெரிவிக்கையில், சிறு வயதில் இருந்தே திருமணம் செய்துக்கொள்ள ஆசை இல்லை. திருமண பாரம்பரியம் என்னை பெரியதாக ஈர்க்கவில்லை. நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன்.
அதனால் என்னை நானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். இது சோலோகேமி என அழைக்கப்படுகிறது. மேலும், இது போன்று இந்திய பெண்கள் யாராவது திருமணம் செய்துகொண்டார்களா என தேடிப்பார்த்தேன். ஆனால் யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை.
சுதந்திரத்தை விட்டுகொடுப்பதற்கு சமம்! ரஷியாவின் போருக்கு உக்ரைன் ஜனாதிபதி மனைவியின் ஆதங்கம்
இந்தியாவில் முதன் முறையாக தன்னை தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் – அவர் சொன்ன காரணம் இருக்கே…
கோவா ஹனிமூன்
இதனால் திருமணத்தை புனிதமாக கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாக இருப்பேன். என்னுடைய பெற்றோர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
அவர்களுக்கு இதில் மகிழ்ச்சி தான். எனது மெஹந்தி ஜூன் 9ம் தேதியும், திருமணம் ஜூன் 11ம் தேதியும் மாலை 5 மணிக்கு நடைப்பெற உள்ளது என தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து ஹனிமூனுக்கு இவர் கோவாவு செல்ல உள்ளாராம்….