முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்!

October 27, 2022 at 4:01 pm
pc

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்தஒரு தகவலும் வரவில்லை.

இதற்கிடையே தற்போது அஜித் 63-வது திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், அதன்படி அஜித் மீண்டும் அவரின் வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும்.

அப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website