முரட்டு ஆளா இருக்காரே – சீனாவுக்கு எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை!

June 9, 2022 at 9:14 am
pc

ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீத மக்கள் தொகையை சீனா இழக்கும் என எலான் மஸ்க் (Elon Musk)தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலக பணக்காரர்களில் முதன்மை ஆனவருமான எலான் மஸ்க்(Elon Musk) ஏற்கனவே மக்கள்தொகை வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். “மக்கள்தொகை வீழ்ச்சி, “நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என தெரிவித்து இருந்த அவர் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளையும் என்பதால் மக்கள் குழந்தைகளைப் பெறுவதில்லை என்ற கதை முட்டாள்தனமானது என தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் ‘பூமி அதன் தற்போதைய மனித மக்கள்தொகையை விட பல மடங்கு தாங்கும் சக்தி உடையது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் அமைப்பும் நன்றாகத்தான் இருக்கும்’ என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது சீனாவின் மக்கள்தொகை குறித்து ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், ” சீனாவில் இன்னும் ஒரு குழந்தை கொள்கை தான் இருக்கிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்நாட்டில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்றளவும் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

இதனால் வரும் காலங்களில் ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீத மக்கள் தொகையை சீனா இழக்கும்.

இது, உலக மக்கள் தொகையில் பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று குழந்தைகள் கொள்கையை அறிமுகப்படுத்திய போதிலும் சீனாவின் மக்கள்தொகை 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website