முறையற்ற வாழ்க்கை வாழ்வதினால் உருவாகும் நீரிழிவு நோயும் உங்கள் உடல் அமைப்பும்….!!

June 3, 2022 at 10:59 am
pc

நீரிழிவு நோய் இன்று மிகச் சாதாரண நோயாக நம்மிடையே பரவியிருக்கிறது.
முறையற்ற வாழ்க்கை வாழ்வதினால் உருவான உடற் குறைபாடே நீரிழிவு .
நீங்கள் வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர் எனில் கீழ்க்கண்ட பாதிப்புகள் தெரியும்.
வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு நரம்புகள் வலுவிழந்து உடல் பலமிழக்கும்.
மேலும் காலில் வலி உண்டாகும். மூட்டுக்குக் கீழ் கால்பாதம், நகம், கெண்டை சதைப் பகுதிகள் இறுகி காய்ந்து உலர்ந்ததுபோல் தோற்றமளிக்கும்.
மலம் சிலசமயம் கறுத்து வெளியேறும். நகக் கண்கள் கறுத்துப் போகும்.
வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தால், மூட்டு இறுகி கணுக் கால்களில் சிறிது வீக்கத்துடன் வலியை உண்டுபண்ணும்.
இதுபோல் இடுப்புப் பகுதி, தொடையின் சதைப்பகுதி இறுகி காணப்படும்.
மேலும் காலில் அதிக புண், புரை உண்டாககனால் எளிதில் ஆறுவதில்லை.
பலருக்கு கை, கால்கள் மரத்துப் போகும். காலையில் கால்களில் அதிக வலி உண்டாகும். பாதங்களை தரையில் ஊன்றி நடக்க முடியாது.
உடனடியாக வாழ்க்கை முறையை மாற்றுங்கள். வள்ளல் பெருமான் வகுத்துக் கொடுத்த இல்லறத்தார்களுக்கு உரிய நித்திய கரும விதிகளை பின்பற்றி உடலை செப்பனிட்டால் நீரிழிவு ஓடிவிடும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website