ரஜினி வீட்டில் பிரபல சாமியார்;ஏன் தெரியுமா ?

October 16, 2022 at 10:07 pm
pc

மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வெற்றி படமாகவே அமைந்து இருக்கிறது. இதனை ரசிகர்கள் தூக்கி வைத்து, கொண்டாடி வருகின்றனர். 

முன்னதாக சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

அவர் கூறும்போது, ‘பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியத்தேவனாக நினைத்துப் பார்த்தது உண்டு. மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படம் தொடங்கியதும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க நான் வாய்ப்பு கேட்டேன். 

அதற்கு மணிரத்தினம் ‘உங்களது ரசிகர்களுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது’ என, சொல்லி மறுத்து விட்டார் என்று ரஜினிகாந்த் பல பேர் முன் ரகசியத்தை போட்டு உடைத்து இருந்தார். 

மேலும், அப்போதே கதை இருந்தால் சொல்லுங்கள் என ரஜினி கேட்டதாகவும், அதற்கு மணிரத்தினம் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்து இருந்ததால் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

இதற்கிடையே இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதி செய்யப்பட்டு படத்துக்கு ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது ரஜினி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு பரனூர் மகாத்மா என்று சொல்லப்படும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி இன்று, திடீரென வருகை தந்தார். அவரை ரஜினி, லதா ரஜினி ஆகியோர் வரவேற்றனர். 

இதன் பின்னர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகளுக்கு ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் பாத பூஜை செய்து வழிபட்டனர். இதை தொடர்ந்து ரஜினிக்கு கிருஷ்ணப்ரேமி சுவாமி ஆசி வழங்கினார்.

ஜெயிலர் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், திடீரென ரஜினி வீட்டுக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி வருகை தந்ததும், அவருக்கு பாதபூஜைகள் செய்து ரஜினி வழிபட்டதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website