ரஷ்ய வரலாற்றில் கருப்பு நாள்… புடினுக்கு கடும் பின்னடைவு: வெற்றிக்களிப்பில் உக்ரைன்

November 10, 2022 at 1:51 pm
pc

உக்ரைனில் மீண்டும் ஒரு பலத்த பின்னடைவை விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது உக்ரைனில் முன்னெடுத்துவரும் ரஷ்யாவின் திட்டங்களுக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்பட்ட கெர்சன் நகரில் இருந்து மொத்த துருப்புகளையும் விளாடிமிர் புடின் திரும்ப பெற்றுள்ளார்.

கெர்சன் உக்ரைன் வசம்

பிப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் ரஷ்யர்கள் கைப்பற்றிய ஒரே பிராந்தியம் கெர்சன் மட்டுமே. தற்போது குறித்த பிராந்தியத்தில் இருந்தும் ரஷ்யா வெளியேறியிருப்பது முக்கிய திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

கெர்சன் பகுதியில் இருந்து வெளியேறும் புடினின் படைகள் டினிப்ரோ நதியின் கிழக்குக் கரைக்கு திரும்பும் என்றே கூறப்படுகிறது. மேலும், பிப்ரவரிக்கு பிறகு உக்ரைன் துருப்புகள் கெர்சன் பிராந்தியத்தை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது.

இது ரஷ்ய வரலாற்றில் கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, புடினின் திட்டங்களுக்கு ராணுவ வட்டாரத்தில் போதிய ஒப்புதல் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

உதவிகளை அனுப்ப முடியவில்லை

இதனிடையே, கெர்சன் பகுதிக்கு திட்டமிட்டபடி தங்களால் உதவிகளை அனுப்ப முடியவில்லை என கூறும் உக்ரைனுக்காக ரஷ்ய தளபதி Gen Sergei Surovikin, இந்த முடிவு ரஷ்ய ராணுவ வீரர்களின் உயிரையும், அப்பகுதியில் ரஷ்யாவின் போர் திறனையும் காப்பாற்றும் என்றார்.

மேலும், எங்கள் துருப்புக்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ள அவர், பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வெளியேற விரும்புவோரின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கப்படும் என்றார்.

கெர்சன் பகுதியில் ரஷ்ய துணைத் தலைவரான Kirill Stremousov கார் விபத்தில் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, துருப்புகள் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website