ரிலேஷன்ஷிப்ல நான் செஞ்ச அந்த தப்பு; நடிகை கெளதமி சொன்ன தகவல்…

May 23, 2024 at 4:03 pm
pc

ரிலேஷன்ஷிப் குறித்து நடிகை கெளதமி ஓப்பனாக பேசியுள்ளார்.

நடிகை கெளதமி

நடிகை கெளதமி, தன்னுடைய வாழ்க்கையில் ரிலேஷன்ஷிப் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ” நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து, அந்த ரிலேஷன்ஷிப் சரிவர ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால்,

அதற்கு நீங்கள் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்பா, அம்மா, மகள், கணவர் காதலர் என எந்த விதமான ரிலேஷன்ஷிப் ஆக இருந்தாலும் சரி, அந்த ரிலேஷன்ஷிப்பில் இருவருக்கும் இடையே, ஒரு மையப் புள்ளி ஆனது கண்டிப்பாக இருக்கும்.

அந்த மைய புள்ளி வரை இருவரும் வந்து, நீ பாதி வேலையைச் செய், நான் பாதி வேலையை செய்கிறேன் என்று இருக்க வேண்டும். ஆனால் சில பேருக்கு, ஏதோ ஒரு காரணத்தால் அந்த மையப் புள்ளிக்கும், அவருக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கும். இங்கு நடக்கக்கூடிய தவறு என்னவென்றால், இன்னொரு பக்கம் இருக்கக்கூடிய அந்த நபர் ஐயோ..

ரிலேஷன்ஷிப் அட்வைஸ்

நீ அவ்வளவு தூரம்தான் கடந்து வந்திருக்கிறாயா என்று சொல்லி, அவர்களுக்காக இவர்கள், மையப்புள்ளியில் இருந்து இன்னும் கொஞ்சம் தூரத்தை கடந்து அவர்கள் பக்கம் வருவார்கள். அப்படி செய்யும் போது, நாம் அதை அவர்களுக்கு பழக்கப்படுத்தி விடுகிறோம். அப்படி இருக்கும் பொழுது, அந்த இன்னொரு நபர், நான் ஏன்உனக்காக அவ்வளவு தூரம் வரவேண்டும்.

நீ எனக்காக இங்கு இன்னும் கொஞ்சம் தூரம் வா என்று சொல்லி, மொத்த வேலையையும் நம்மீது கட்டிவிடுவார்கள். இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன். ஆகையால், அது எந்தவித ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி நீங்கள் அந்த மையப் புள்ளியை தாண்டக்கூடாது. 

இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். நீங்கள் 50 சதவீதத்தை கடக்கும் பொழுது, உங்களுக்கும் அதை செய்து பழக்கமாகிவிடும். எதிர் தரப்புக்கும் வாங்கி பழக்கமாகிவிடும். அது நல்லதல்ல” எனப் பேசியுள்ளார்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website