வனிதா விஜயகுமாரை கொடூரமாக தாக்கிய ரசிகர்!!நடந்தது என்ன?

November 29, 2023 at 10:18 pm
pc

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிரதீப் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் வனிதா.

தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள வனிதா விஜயகுமார், “ இன்றைய காலகட்டத்தில் நமக்கு நடந்தது குறித்து வெளியே சொல்ல வேண்டும், அப்போது தான் அதைப்பார்த்து யாராவது ஒருவர் திருந்துவார்.

மனரீதியாக பெண்களுக்கு ஆண்களை விட பலம் இருந்தாலும் உடல் ரீதியான பலம் குறைவு.

அதுவும் பிரபலமாக இருந்தால் முகம் மிக முக்கியது, இந்த முகத்தை வெளியே காட்டக்கூடாது என்பதற்காக மட்டுமே இப்படி செய்துள்ளார்கள்.

நான் தாக்கப்பட்டதை பொய் என்றும், செட்டப் எனவும் கூறுவார்கள் என எனக்கு தெரியும், இதை யாரும் நம்பமாட்டார்கள் என நினைத்தேன்.

அந்தளவுக்கு மட்டமான மக்கள் வாழும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு சிலருக்கு மட்டுமே மனிதாபிமானம் உண்டு, அன்றைய தினம் நான் அங்கே தான் இருக்கிறேன் என்பதை தெரிந்துகொண்டே வந்துள்ளனர்.

அந்த நபர் என் அருகில் வந்து, ரெட் கார்டு. அதுல நீ சப்போர்டா என கூறியதும் மட்டும் காதில் விழுந்தது.

என்னை அடித்ததும் கைகள் நடுங்கிவிட்டது, அப்படியே மயங்கிவிட்டேன். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்னர் தான் வீட்டிற்கு வந்தேன்.

காலையில் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு விட்டு உறங்கிவிட்டேன், கண்விழித்து பார்த்த போது பொலிஸ் அதிகாரிகள் இருந்தனர், எனது பாதுகாப்பிற்காகவும் காவலர் ஒருவரை கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website