வயதான உறவினரை 20 முறை கத்தியால் தாக்கி கொலை செய்த நபர்..

வடக்கு லண்டனில், உளவியல் காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டே நாளில் நபர் ஒருவர் தமது வயதான உறவினரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரமாரியாக தாக்கி கொலை
குறித்த நபர் தற்போது காலவரையின்றி உளவியல் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ஃபீல்டு பகுதியை சேர்ந்த 34 வயதான சுபெல் அலி என்பவரே மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த 80 வயது சோம்தெரா பீபி என்பவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில் பிரிக் லேன் பகுதியில் பொலிசாரை எதிர்கொண்ட நிலையில், அலி கைது செய்யப்பட்டார். உளவியல் காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரண்டே நாட்களில் அலி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் செயல் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2022 ஏப்ரல் மாதம் 2ம் திகதி சுபெல் அலியின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தனியாக இருந்த தமது பாட்டி சோம்தெரா பீபி என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் கலங்கடிக்கும் கதறல் சத்தம் கேட்டு சோம்தெரா பீபி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த சுபெல் அலியின் தாயார் அதிர்ந்து போயுள்ளார்.
கொலை செய்ய கூறிய ஒரு குரல்
இதனிடையே, அலியின் சகோதரி சீமா 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு, சகோதரர் தொடர்பில் உதவி கோரியுள்ளார். இந்த நிலையில், பாட்டியை கொலை செய்ய ஒரு குரல் தம்மை கேட்டுக்கொண்டதாக அலி தமது தாயாரிடம் கூறியுள்ளார்.
கொலை செய்த பின்னர் வாளினை சமையலறையில் வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே நடந்து சென்றுள்ளார் அலி. சம்பவம் நடந்து 10 நிமிடங்களுக்கு பின்னர் பொலிசார் அலியை கைது செய்துள்ளனர்.
உளவியல் பாதிப்பு கொண்ட அலி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள தகுதியற்றவர் என்பதால், உளவியல் சட்டப் பிரிவு 37 மற்றும் 42ன் கீழ் அவரை காலவரையின்றி மருத்துவமனையில் சேர்ப்பிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.