வீட்டிற்குள் காற்று மாசுபாடு அதிகப்படுவதை தவிர்க்க எளியமையான டிப்ஸ் ……!!

June 23, 2022 at 3:34 pm
pc

நமது வீட்டில் குப்பைகளால் தான் மாசுபடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இப்பொழுது எப்படி வெளியில் செல்லும்பொழுது காற்று மாசுபடுவதை உணர்வீர்களோ அதே போல் தான் நம்முடைய வீட்டிலும் ஒரு சில செயல்களால் காற்று மாசுபாடு இருக்கிறது. இது நாம் வீட்டில் சாமிக்கும் பொழுது ஏற்படலாம் அல்லது வீட்டிற்கு பக்கத்தில் ஏதேனும் தொழிற்சாலைகள் அல்லது வாகனங்கள் ஓட்டுவது ஆகியவற்றின் மூலமாகவும் ஏற்படலாம். ஏதுவாக இருந்தாலும் சரி அதில் இருந்து வீட்டை பாத்துக்க செய்யவேண்டிய வழிமுறைகள்.

ஜன்னல்கள்

இயற்கையாக வீட்டில் இருக்கும் காற்று மாசுபாட்டை அகற்ற இதுவே சிறந்தது. ஏனெனில் வீட்டில் இருக்கும் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்தாலே போதும். வீட்டில் இருக்கும் அசுத்த காற்று வெளியேறி, ஆரோகியமான காற்று வீட்டிற்குள் வரும். சரி அப்பொழுது வெளியில் இருக்கும் மாசு உள்ளே வராதா என்று நீங்கள் கேட்டால், அதுவும் உண்மை தான். அதனால் வீட்டிற்குள் பக்கத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத சமயத்தில் ஜன்னல்களை திறந்து வைத்துகொள்ளவவும்.

எக்ஸாஸ்ட் ஃபேன்

நாம் சமையல் அறையில் தான் புகை அதிகமாக வெளியேறுகிறது. அதனால் சமைக்கும் பொழுது எக்ஸாஸ்ட் ஃபேனை ஆன் செய்து பயன்படுத்தவும். அதே போல் பாத்ரூமில் குளித்த உடன் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தி நீராவியை வெளியேற்றவும். பின்பு அடிக்கடி அதனை சுத்தம் செய்யவும், இல்லையேல் அதில் இருக்கும் மாசு மீண்டு உள்ளே வந்துவிவிடும்.

வாசனை பொருட்களுக்கு நோ

சரி வீடு ரொம்ப மோசமா இருக்கு, வீட்டிற்கு உரம்பரை யாரேனும் வரும் நேரம் நெருங்கி விட்டது. இப்ப என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்குள் வாசனை பொருட்களை அடித்து துர்நாற்றத்தை அகற்ற நினைப்பீர்கள். அது ஒரு வகையில் நல்ல ஐடியா தான். இருப்பினும் அது மாசுபட்ட காற்றுடன் சேர்ந்து ரசாயனத்தை கலக்க நேரிடும்.

வீட்டில் பெட் இருக்கா

உங்களுக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்குமா? பறவாயில்லை. அவற்றை வீட்டிற்குள் அனுமதித்து நன்கு அதனுடன் விளையாண்ட பிறகு, உங்களின் செல்லப்பிராணியை நன்கு அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும். பின்பு சிறிது நேரம் செல்லப்பிராணியை வெளியில் அனுப்பிவிட்டு வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இது கொஞ்சம் கடுப்பான வேலை தான் இருப்பினும், வேறு வழி இல்லை.

டோர்மெட்

வெளியில் சென்று வீடு திரும்பும் சமயத்தில் காலணிகளை உள்ளே எடுத்துச்செல்லாமல் வெளியில் விட்டுவிடவும். பிறகு டோர்மெட்டில் நன்றாக கால்களை துடைத்துவிட்டு உள்ளே செல்லவும். இது கொஞ்சம் ஈஸியா இருக்கும். பிறகு அடிக்கடி டோர்மெட்டை சுத்தம் செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

இண்டோர் செடிகள் 

நமது வீட்டில் ஒவ்வொரு பகுதியில் வைப்பதற்கு என்று நிறைய செடிகள் உள்ளன. வீட்டிற்குள் இருக்கும் மாசுபாட்டை அகற்ற மற்றும் குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டிற்குள் புகை இருக்கவே கூடாது

வீட்டிற்குள் புகை பிடிப்பதோ அலல்து புகையை ஏற்படுத்தும் ஏதேனும் பொருட்களை ஏற்பதும் இருக்கவே கூடாது.

ஏர் ப்யூரிஃபையர்

நமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளாத நேரத்தில் நீங்கள் ஏர் ப்யூரிஃபையர் உபயோகிக்கலாம். இது முழுமையாக காற்று மாசுபாட்டை அகற்றும் என்று கேட்டால்?கிடையாது. இருப்பினும் சற்று குறைக்க உதவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website