வீட்டில் கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா ….? இத ட்ரை பண்ணுங்க… இனி கொசுவே வராது…!!

June 22, 2022 at 10:37 am
pc

கொசுவத்தி, கொசு பேட் போன்ற பல்வேறு வகையான முறைகளை உபயோகித்தும் வீட்டில் கொசுக்களை முழுமையாக நீக்க முடியவில்லையா..? கவலை வேண்டாம். இதில் சில இயற்கை முறைகளைப் பயன்படுத்தி கொசுக்களை எவ்வாறு விரட்டலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்

கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் என்றும் நமக்கு பெரும் பாதிப்பு கொடுக்கக்கூடியதாக இருப்பது கொசு. கொசுவால், பல்வேறு வகையான பெரிய அளவிலான பாதிப்புகள் உண்டாகும். அதன் படி, கொசுக்களால் பரவக் கூடிய மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு நோய்க்காரணிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும், கொசுக்களை ஒழிப்பதற்கு பல்வேறு வகையான முறைகளைப் பயன்படுத்தியும் கொசுக்களை விரட்ட முடியாத சமயத்தில், வீட்டில் உள்ள இயற்கை பொருள்களை வைத்து விரட்ட முடியும். அதற்கான சில வழிமுறைகள் பற்றி இங்கு காணலாம்.

தண்ணீரை தேங்க விடக் கூடாது

செயற்கை முறையில் நாம் கொசுக்களை விரட்ட முயற்சிப்பதுடன், இது போன்ற இயற்கை முறைகளையும் கையாள்வதன் மூலம், கொசுக்களை விரட்ட முடியும் .

சுகாதாரத்துறை அதிகாரிகள், மழைக் காலங்களில் வீட்டின் சுற்றுப்புறத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். அவ்வாறு, ஒவ்வொருவரும் வீட்டின் உட்புறம் தூய்மையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வெளிப்புறத்திலும் தூய்மையாக வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு சாலையில் கண்டும் காணாமல் செல்லாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால், கொசுக்களிடம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஜன்னல் மற்றும் கதவுகள்

வீட்டிற்குள் கொசுக்கள் காலை நேரத்தை விட மாலை நேரத்திலே அதிகமாக இருக்கும். அதனால், கொசுக்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு மாலை நேரங்களில், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அதன் படி, சூரிய ஒளி மறைவதற்கு முன்பு வீட்டில் ஜன்னல், மற்றும் கதவுகள் மூடிவிட வேண்டும். மேலும், நோஎ எதிர்ப்புச் சக்தி இல்லாத நபர்களுக்கு கதவுகளில் கொசு வலைகள் அமைப்பது பரிந்துரைக்கத்தக்கது.

மெழுகுவர்த்தி

மணங்களினால் கொசுக்கள் விரட்டம் என்பது உண்மை. அதனால், தான் சிலர் வீட்டில் மெழுகுவர்த்தி அல்லது வாசனை எண்ணெய்களைக் கொண்டு விளக்கு ஏற்றி வைப்பர். இவ்வாறு இருக்கும்பட்சத்தில், வீட்டில் நறுமணப் பொருள்கள் வீசுவதால் கொசுக்கள் விரட்டி அடிக்கப்படும். இதனால், இதனைப் பயன்படுத்தியும் கொசுக்கள் விரட்டியடிப்பதற்கான முக்கிய செயல்முறையாக உள்ளது.

எலுமிச்சை மற்றும் கிராம்பு

கொசுக்களுக்கு அலர்ஜியும் ஏற்படுமாம். அதற்கு முக்கிய காரணம் எலுமிச்சை மற்றும் கிராம்பின் வாசனைகள். அதன் படி, வீட்டில் ஆங்காங்கே ஒரு சிறிய தட்டில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் கிராம்புகளைக் குத்தி வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம், கொசுக்கள் வருவது குறைய ஆரம்பிக்கும் .

பூண்டு ஸ்ப்ரே

பூண்டு பெரும்பாலும் கொசுக்களை விரட்டவே பயன்படுகிறது. அதன் படி, முதலில் பூண்டை தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின், அந்தத் தண்ணீரை ஸ்பிரே போல தெளிப்பதன் மூலம் கொசுக்கள் அண்டுவதைத் தவிர்க்கலாம்.

செடிகள்

இயற்கையாகவே, கொசுக்கள் சில செடிகளால் விரட்டப்படுபவையாக உள்ளது. இதனால், வீட்டில் செடி வளர்ப்பதன் மூலம், கொசுக்களை விரட்டலாம். மேலும், வீட்டில் சிறிதாக வளரக்கூடிய புதினா, துளசி, லெமன், கிராஸ் போன்ற செடிகளை வளர்க்கலாம். இதன் காரணமாக கொசுக்களை விரட்ட முடியும்.

சோப்புத்தண்ணீர்

சோப்பு அல்லது சோப்புத்தூள் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தண்ணீரில் கலந்து கொண்டு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாத்திரத்தை வீட்டின் ஒரு ஓரத்தில் வைப்பதன் மூலம் வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை விரட்ட முடியும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website