ஹிட் கொடுக்க திணறி வரும் 5 நடிகர்கள்!

April 26, 2023 at 12:13 pm
pc

சில நடிகர்கள் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் நடித்த முதல் படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருந்தாலும் அதை தக்க வைத்துக் கொள்ளும்படியாக தொடர்ந்து வெற்றிப்படங்கள் அமையவில்லை. அதனால் மறுபடியும் ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் சில நடிகர்கள் திணறிக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

விக்ரம்: இவர் தனது ஆரம்ப காலத்தில் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் சேது படம் தான் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்று அங்கீகாரத்தை கொடுத்தது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, ஜெமினி, தில், தூள் போன்ற வெற்றி படங்களை நடித்து மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் இவர் நடித்த அந்நியன் படம் அதிக பாராட்டுகளை பெற்று சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார். ஆனால் அதன் பிறகு வந்த ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், கோப்ரா போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு பொன்னின் செல்வன் முதல் பாகம், இரண்டாம் பாகம் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அடுத்த அடுத்த படங்களில் வெற்றி பெற வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறார்.

ஜெயம் ரவி: இவர் தனது முதல் படத்தின் மூலமே அதிகமாக பிரபலமாகி ஜெயம் ரவி என்று சொல்லும் அளவிற்கு ஜெயம் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியன், தனி ஒருவன் போன்ற பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். ஆனால் அதன் பிறகு வந்த போகன், வனமகன், டிக் டிக் டிக், அடங்கமறு போன்ற படங்கள் சராசரியான வரவேற்பை மட்டும் பெற்றது. இந்த நேரத்தில் தான் அவருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மன் கேரக்டர் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். ஆனால் தற்போது இவருடைய நிலைமை கும்பலோடு கோவிந்தா போடும் நிலைமை ஆகிவிட்டது.

ஆர்யா: இவர் அறிமுகமான அறிந்தும் அறியாமலும் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, பட்டியல், நான் கடவுள், சிவா மனசுல சக்தி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் சமீப காலமாக இவருக்கு தோல்வி படங்களாக தான் அமைகிறது. அதனால் மறுபடியும் எப்படி ஹீட் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் திணறிக் கொண்டு வருகிறார். அதிலும் இவர் நடித்த கேப்டன் படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றது.

அருண் விஜய்: இவர் 80, 90களில் இருந்தே முன்னணி நடிகராக வலம் வர வேண்டும் என்பதற்காக மிகவும் போராடிக் கொண்டே இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்தபடி சில படங்கள் வெற்றியை கொடுத்திருந்தாலும் பல படங்கள் தோல்வியாக தான் அமைந்து வருகிறது. அதனாலயே சில சமயங்களில் ஹீரோவாக இல்லாமலும் குணசேத்திர கேரக்டர் மற்றும் வில்லன் கேரக்டரிலும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது வரை முன்னணி நடிகராக வருவதற்காக விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்.

விஜய் ஆண்டனி: இவர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அதன் பின் இவருக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் ஆசை இருந்ததால் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நடித்த முதல் படம் தான் நான். இப்படத்தின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அவருக்கு முழு நேரம் ஹீரோவாக வேண்டும் என்பதில் ஆர்வம் வந்துவிட்டது. அதற்காக சலீம், இந்திய பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிர் பிடித்தவன் போன்ற பல படங்களில் நடித்தார். இவரது படங்கள் என்னதான் வெற்றி பெற்றாலும் முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை. அதற்காக முயற்சியை கைவிடாமல் இப்பொழுது வரை போராடி தான் வருகிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website