ஹிந்தி படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி..காரணம் அதுதான்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோக்களிலேயே சற்று வித்தியாசமானவர் விஜய் சேதுபதி என்றும் கூறலாம். ஏனென்றால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் தனக்கு சவாலான கதாபாத்திரங்கள் அனைத்திலும் நடித்து தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருபவர் விஜய்சேதுபதி.
வில்லன், குணச்சித்திர நடிகர், கெஸ்ட் ரோல் என அனைத்திலும் தயங்காது நடித்து வருகின்றார். ஒரு பக்கம் சாந்தமான காதலனாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும், மறுபக்கம் கொடூரமான வில்லனாக விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகின்றார் விஜய் சேதுபதி.
இவ்வாறு பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. தமிழ் சினிமாவிலேயே பிஸியான ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தில் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டியதாம். ஆனால் அதற்கு பதிலாக நாக சைதன்யா நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்த காரணத்தை அவர் படக்குழுவிடம் கூறி படத்திலிருந்து விலகினார். அதன் பின்னரே தான் நான் லால் சிங் சத்தா படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன் என்றார் நாக சைதன்யா.
மேலும் அமீர் கான் நடிப்பில் உருவான லால் சிங் சத்தா திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதிவாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது