16 வது IPL தொடர்! உற்சாகத்தில் ரசிகர்கள்.. களைகட்டும் கொண்டாட்டம்

March 31, 2023 at 2:36 pm
pc

இன்று ஆரம்பமாகவுள்ள IPL தொடரில் முதல் போட்டியாளராக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இன்று இரவு 7.30 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரபமாகவுள்ளது.

போட்டித் தொடங்குவதற்கு முன்பாக ஆடல், பாடலுடன் கூடிய கலைநிகழ்ச்சிகளை நடைபெறவுள்ளது.

தென்னிந்திய நடிகைகளான தமன்னா மற்றும் ரஷ்மிகா மந்தானாவின் நடனம் இடம்பெறலாம்.

https://twitter.com/IPL/status/1641494935911403521?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1641494935911403521%7Ctwgr%5E7b2ce39298cf7162049f754aa55eb3608f5dfa5e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Ftoday-ipl-match-start-1680236232

இது தொடர்பாக இந்தியன் பிரீமியர் லீக்கின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “மார்ச் 31, 2023 அன்று மாலை 6 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஜியோ சினிமா இணைந்து நடத்தும், பிரம்மாண்டமான TATA IPL தொடக்க விழாவில் தமன்னாவுடன் மிகப்பெரிய கிரிக்கெட் கொண்டாட்டத்தில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக முதல் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணித்தலைவர்களும் தங்களது அணிகளை தீவிரமாக பயிற்சியில் ஈடுப்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு அணியும் உள்ளூர் மைதானம் மற்றும் வெளியூர் என போட்டி முறையில் ஆடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.  

இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/IPL/status/1641666776219156481?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1641666776219156481%7Ctwgr%5E7b2ce39298cf7162049f754aa55eb3608f5dfa5e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Ftoday-ipl-match-start-1680236232
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website