19 வயதிலேயே இறந்த நடிகைக்கு இருந்த அரிய வகை நோய்! அதன் அறிகுறிகள் என்ன?

February 18, 2024 at 9:55 pm
pc

‘தங்கல்’ பட நடிகை சுஹானி உயிரிழந்ததற்கு காரணம் அரிய வகை நோய் தான் என்று தெரிய வந்துள்ளது.

ஆமிர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

அவர் 19 வயதிலேயே மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து தெரியாமல் இருந்தது.  

சுஹானியின் தந்தை

இந்த நிலையில் Dermatomyositis எனும் நோயால் பாதிக்கப்பட்டதாலேயே சுஹானி உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. தனது மகளின் இறப்பிற்கான காரணம் குறித்து சுஹானியின் தந்தை கூறுகையில், ‘இரண்டு மாதங்களுக்கு முன்பு சுஹானி கைகளில் சிவப்பு புள்ளி ஏற்பட்டது.

இதனை அலர்ஜி என நினைத்து வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றோம். ஆனால் என்ன நோய் என்று கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து சுஹானியின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவள் கைகளில் வீக்கம் ஏற்பட்டு, அது அதிகரிக்க தொடங்கியதுமேலும், இந்த வீக்கம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 

அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு நுரையீரலில் திரவம் தேங்க ஆரம்பித்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறினர். மேலும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்கியது. 

இந்த நிலையில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டெராய்டுகளால் அவளது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டது. வெண்டிலேட்டரில் வைத்தபோதும் ஆக்சிஜனின் அளவு குறைந்துதான் காணப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

சுஹானிக்கு Dermatomyositis எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு அரிய வகை நோய் ஆகும்.

அறிகுறிகள்

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோர்வு, காய்ச்சல், எடை இழப்பு, தலைவலி, கண் இமைகள் தொங்குதல், சுவாசிப்பதில் சிரமம், தோல் சிவப்பு நிறமாக மாறுதல், கண் பகுதியில் வீக்கம் ஆகிய அறிகுறிகளை சந்திப்பர்.

மருத்துவரை அணுகுதல்

உடலில் தசைகள் பலவீனம் அடையும்போதோ அல்லது சொல்ல முடியாத அளவிற்கு சொறி தன்மை ஏற்பட்டாலோ உடனே மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.     

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website