2 பான் கார்டு வைத்திருக்கிறீர்களா? உடனே இதை செய்யுங்கள்- தவறினால் ரூ.10,000 அபராதம்!

August 9, 2022 at 1:09 pm
pc

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என யாராக இருந்தாலும், இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது வங்கிகளில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாலோ நிச்சயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே பான் கார்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. புதிதாக வங்கிக்கணக்கு துவங்குவதற்கும் அவசியம் என்ற உத்தரவையடுத்து மக்கள் ஆன்லைன் மற்றும் கம்யூட்டர் சென்டர்கள் உதவியோடு பான்கார்டுக்கு அப்ளை செய்கின்றனர். இப்படி பான் கார்டை ஆன்லைன் வாயிலாகப் பெறும் நாம், சில நேரங்களில் தொலைத்துவிடுவோம். பின் மீண்டும் விண்ணப்பிக்கும் போது 2 கார்டுகள் உள்ளது போன்று காண்பிக்கும். இன்னும் சிலரோ, டிமேட், வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருப்பார்கள். இவ்வாறு வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு பான் கார்டு வைத்திருப்பதும், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமானவரிச்சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் விதிகளின்படி சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தின் படி ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் 2 பான் கார்டு வைத்திருந்தால் என்.எஸ்.டி. எல் ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html அல்லது வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, 2 பான் கார்டு இருந்தால் ஒரு கார்டை சமர்ப்பிப்பதற்கென்று ஒரு படிவம் வழங்கப்படும். இந்த படிவத்தில் நீங்கள் எந்த பாண் எண்ணை தொடர்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்களோ? அந்த பான் எண்ணை குறிப்பிட்டு, மீதமுள்ள பான் தகவலை பார்ம் எண் 11 படிவத்தில் நிரப்ப வேண்டும். 2 பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக இந்த முறையை பின்பற்றி வருமான வரித்துறைக்கு அபராதத்தொகையைக் கட்டாமல் தப்பித்துவிடுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website