2024 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள்!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் அனைத்து நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்த லால் சலாம் படமும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 2024 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பத்து படங்களை பார்க்கலாம்.
வேட்டையன் : டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரானா டகுபதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர்.
தங் லைஃப் : நாயகன் படத்திற்கு பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் இருவரும் கூட்டணி போட்டிருக்கும் படம் தான் தங் லைஃப். இப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு இறுதியில் படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
விடாமுயற்சி : மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் கூட்டணியில் உருவாகி வருகிறது விடாமுயற்சி படம். இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பை முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. துணிவு படத்திற்கு பிறகு அஜித் படம் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் விடாமுயற்சி படத்திற்காக பெரிதும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கோட் : வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் த கிரேட்டஸ்ட் ஆல் டைம் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, மைக் மோகன், பிரபுதேவா, லைலா, பிரசாந்த் போன்ற எக்கச்சக்க திரை பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். தளபதி ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸுக்காக எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
தனுஷ் 50 : தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நித்யாமேனன், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலட நடிப்பில் தனுஷ் 50 படம் உருவாகி வருகிறது. தனுஷே இந்த படத்தை இயக்கி நடிப்பதால் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக இருக்கிறது. இந்த வருடம் இறுதிக்குள் இப்படமும் வெளியாக உள்ளது.
கங்குவா : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் கங்குவா படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் கழுகு போல் இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கிடக்கின்றனர்.
இந்தியன் 2 : ஷங்கர், கமல் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களாக உருவாகி வருகிறது. லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், காளிதாஸ் ஜெயராம், பிரியா பவானி சங்கர் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களுமே இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலை 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வந்த நிலையில் இப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் மஞ்சு வாரியர் இணைந்துள்ளனர்.
தங்கலான் : கோலிவுட் சினிமா மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணா என பலர் நடித்து வருகின்றனர். தங்கலான் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
மகாராஜா : விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் தான் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் மம்தா மோகந்தாஸ், முனீஸ் காந்த், பாரதிராஜா, அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர்.