2027 உலகக்கோப்பையில் இவர்கள் விளையாட வாய்ப்பில்லை!
2023 உலகக் கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தான் சில கிரிக்கெட் வீரர்களுக்கு கடைசி என தெரிகிறது. அதன்படி, ரோஹித், முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா, கோலி (ஃபிட் இல்லை என்றால்) 2027 உலகக்கோப்பையில் விளையாட முடியாது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் வில்லியம்சன், சவுத்தி மற்றும் சிலர் அடுத்த உலகக்கோப்பையின் போது 40 வயதை எட்டுவார்கள்.