500 ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடி படம்’-பாஜக எம்எல்ஏ ராம் கதம்

October 27, 2022 at 3:15 pm
pc

மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ராம் கதம் என்பவர் ‘பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்’ என கூறினார். அதனை வலியுறுத்தும் விதத்தில், பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை போட்டோஷாப் மார்பிங் செய்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவை மேன்மை அடையச் செய்ய மோடியின் முயற்சியை இந்தியா மட்டுமின்றி, உலகமே நினைவு கூரும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படத்தை அச்சிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.மணீஷ் திவாரியும் பிள்ளையார் மற்றும் வரலட்சுமி படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபையும் கோரிக்கை விடுத்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website