90ஸ்ஸ் ஹீரோயின் யோகி பாபுவுக்கு அம்மாவாக நடிக்கவுள்ளார்

October 6, 2023 at 8:14 pm
pc

கடந்த 90களில் ரசிகர்களின் மனதில் குடியிருந்த நடிகை, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர் யோகி பாபு அம்மா கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’புதுப்புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் சித்தாரா. இதனை அடுத்து அவர் ’புது வசந்தம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்திற்கு பின்னர் அவர் தமிழில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ’சன்னிதானம் பிஓ’ என்ற படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக சித்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அமுதசாரதி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் சிறு வயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதை என்றும் தாயாக சித்தராகவும் மகனாக யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க சபரிமலை பின்னணியில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website