சினிமா

அப்பா-அம்மா பிரிவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகன், மகள்கள் கூறியது என்ன? வைரல் பதிவுகள்..!

Quick Share

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகிய இருவரும் பிரிவதாக முடிவு செய்து தங்களது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். இந்த முடிவு, ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர். ரகுமானின் மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த நேரத்தில் எங்களது தனி உரிமையை மதிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன், “உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல், ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜா தனது சமூக வலைதள பக்கத்தில் இரண்டு கையெடுத்து கும்பிடும் எமோஜியை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி, “மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றும், “கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இதை தாங்கும் மனவலிமையை கொடுப்பார்” என்றும் பதிவு செய்து வருகின்றனர்.ஏ.ஆர். ரகுமானின் இன்னொரு மகளான ரஹீமா, தனது சமூக வலைத்தளத்தில், “இந்த விஷயத்தை மிகவும் தனி உரிமை மற்றும் மரியாதையுடன் நடத்திச் சென்றதற்கு நன்றி. உங்கள் அனைவரின் கருத்துக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன் போட்ட 3 நிபந்தனைகள் – திருமண முறிவு குறித்து AR ரகுமானின் பதிவு!

Quick Share

இசை சின்னமான ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமணத்திற்குப் பிறகு பிரிந்ததாக நேற்று அறிவித்துள்ளனர்.

திருமண முறிவு குறித்து AR ரகுமானின் பதிவு

அவர்களது வழக்கறிஞர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தம்பதியினர் கடினமான முடிவை உறுதிப்படுத்தினர். பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்தை அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்று குறிப்பிட்டனர்.

ஒருவருக்கொருவர் ஆழ்ந்த மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், தங்கள் உறவில் உள்ள சவால்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டன என்பதை தம்பதியினர் ஒப்புக்கொண்டனர்.

மேலும் இது குறித்து AR ரகுமான் தனது X தளத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் , தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஹ்மானின் 3 முக்கிய நிபந்தனைகள்



  1. முதல், ரஹ்மான் பிடித்த துணையைத் தேடினார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இசைக்காக அர்ப்பணித்த அவர், முறையான கல்வியின் மதிப்பை உணர்ந்தார், அதைத் தொடர அவருக்கு குறைந்த வாய்ப்பு இருந்தது. ஒரு படித்த மனைவி, ரஹ்மான் தனது அறிவுத்திறனை பூர்த்தி செய்து, அவரது வாழ்க்கைக்கு சமநிலையை வழங்குவார் என்று உணர்ந்தார்.

  2. இரண்டாவதாக, வழக்கமான தரத்திற்கு அப்பாற்பட்ட தனித்துவமான அழகு உணர்வு கொண்ட ஒரு துணையை ரஹ்மான் விரும்பினார். அழகு பற்றிய அவரது எண்ணம் அவரது ஆன்மீக மற்றும் தனிப்பட்ட மதிப்புகளுடன் இணைந்திருந்தது.

  3. மிக முக்கியமாக, ரஹ்மான் தனது வாழ்க்கை துணையிடம் பணிவு தேடினார். அவரது வளர்ந்து வரும் புகழைக் கருத்தில் கொண்டு, அவர் ஒரு பெண்ணை மதிப்பவராகவும், தாழ்மையாகவும் இருப்பார், அவர் பொழுதுபோக்கு துறையில் தனது பயணத்தில் உணர்ச்சி ரீதியான ஸ்திரத்தன்மையையும் ஆதரவையும் வழங்க முடியும்.

பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் கட்டப்பட்ட அவர்களின் திருமணம் நடைபெற்றது. 

அவர்கள் இப்போது வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், ஆரம்பத்தில் இவ்விருவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

புஷ்பா 2 டிவி உரிமை விலை: இந்திய சினிமாவிலேயே இது தான் பெரிய சாதனை!

Quick Share

புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் முதல் பாகம் pan இந்தியா ஹிட் என்பதால் புஷ்பா 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதனால் இந்த படம் அடுத்த 1000 கோடி படம் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் மொத்த உலக டிவி சாட்டிலைட் உரிமையை Pen Studios நிறுவனம் வாங்கி இருக்கிறது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் Jayantilal Gada பேசும்போது ‘இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய படம்’ என கூறி இருக்கிறார். ஆனால் தொகை எவ்வளவு என்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.

மேலும் ஓடிடி ரிலீஸ் உரிமை நெட்பிலிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டதாக முன்பு செய்தி வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நயன்தாரா சொன்னது எல்லாமே பொய்.. முதல் முறையாக மனம் திறந்த தனுஷின் தந்தை கஸ்தூரி

Quick Share

3 வினாடி வீடியோவுக்கு ரூ.10 கோடி கேட்பதா என்று நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். மேலும் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் தனுஷை கண்டித்திருந்தார். இந்நிலையில் நயன்தாரா குற்றச்சாட்டு குறித்து மனம் திறந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.. எல்லாமே பொய் என்று மறுத்துள்ளார்.

நடிகை நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமண வீடியோ பிரபல ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஆவணப்படமாக வெளியிடப்படும் என்றும் அப்போதே அறிவிக்கப்பட்டது.

இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா தனது காதல், சினிமா, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் நேற்று வெளியானது முன்னதாக ஆவணப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், அதற்கு தனுஷ் தடையாக இருந்ததாகவும் நடிகை நயன்தாரா பகிரங்கமாக குற்றம்சாட்டி கடந்த நவம்பர் 16ம் தேதி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நயன்தாரா கூறுகையில், “பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு (தனுஷ்) எழுதியுள்ளேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜாவின் உறுதுணையோடு, சிறந்த இயக்குனரான உங்கள் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் இதனை நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்.

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்துள்ளேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.

நெட்டிபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கும் ‘நயன்தாரா – பியாண்ட் தி பேரி டேல்’ என்ற ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் (விக்னேஷ் சிவன்) மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது. இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

‘நானும் ரவுடிதான்’ படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள் தான். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 வினாடி வீடியோவிற்கு எதிராக வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் வினோதமானதாகவும் இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

என்னுடைய சினிமா பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கான அனுமதிக்காக வேறு பல தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அதனை அனுமதித்தார்கள். அப்போதுதான், உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், காலங்களை கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை, சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே உள்ளோம். ‘நானும் ரவுடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான ‘காப்பிரைட்’ காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ‘நானும் ரவுடிதான்’ படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்து கொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே இயலாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது. நானும் ரவுடி தான் படத்தின் வெற்றி, உங்களை உளவியல் ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக அறிந்து கொண்டேன். பின்னர், 2016-ம் ஆண்டு பிலிம்பேர் விழாவில் நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது.

எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை தான். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களை செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தின் வாயிலாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஆனால் அடுத்த இசை வெளியீட்டு விழாவில் இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்” இவ்வாறு நயன்தாரா அந்த பதிவில் கூறியிருந்தார்.

தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா விளக்கம்: நயன்தாராவின் இந்த குற்றச்சாட்டு குறித்து தனுஷ் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.. தனுஷ் மட்டுமல்ல அவரது சார்பாக வழக்கறிஞர் உள்பட யாருமே பதில் அளிக்கவில்லை.. அதேநேரம் நயன்தாரா விவகாரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா.. இது பற்றி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில். ” எங்களுக்கு வேலை தான் ரொம்ப முக்கியம். நாங்களே நிற்க நேரம் இல்லாமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் முதுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் அளிக்க எங்களுக்கு நேரமில்லை.. என்னை போலவே என்னுடைய மகனுக்கும் வேலை தான் ரொம்ப முக்கியம்.. தடையில்லா சான்றிதழ் பெற இரண்டு ஆண்டுகள் நயன்தாரா தனுஷ்க்காக காத்திருந்ததாக சொன்னது எல்லாம் பொய்.. இதுபற்றி பேச விருப்பம் இல்லை என்று அந்த பேட்டியில் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். நடிகர் தனுஷ் தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.. தற்போது இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளதாகவும், இந்த வாரம் படக்குழு தாய்லாந்து நாட்டின் பாங்காங்கிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘கங்குவா’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம்.. ஜோதிகாவின் கொந்தளிப்பு பதிவு..!

Quick Share

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிவடைந்தவுடன் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியது. இதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை விமர்சித்தவர்கள் மீது நடிகை ஜோதிகா கொந்தளித்துள்ளார் இது ஒரு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் இந்த குறிப்பை நடிகை ஜோதிகாவாகவும், சினிமாவை நேசிக்கும் ஒருவராகவும் எழுதுகிறேன், நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல.

கங்குவா – சினிமாவில் ஒரு வியப்பூட்டும் சாதனை. சூர்யா. நீங்கள் ஒரு சிறந்த நடிகராகவும், சினிமாவை முன்னேற்றும் கனவுகளை பயமின்றி காணும் ஒருவராகவும் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்,

முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை என்பதையும் சத்தம் அதிகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்த குறை முழு 3 மணி நேரத்தில் இருந்து வெறும் முதல் 30 நிமிடங்கள் மட்டுமே.

உண்மையாகச் சொன்னால், இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை காணாத வெற்றி பழனிசாமியின் கேமரா வேலைப்பாடும், செயல்படுத்தலும் அபாரம்.

ஊடகங்களிலும் சில சமூக வலைத்தளத்தில் இருந்து வரும் எதிர்மறை விமர்சனங்கள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன, ஏனெனில் நான் முன்பு பார்த்த மிகப்பெரிய அறிவு குறைவான பெரிய பட்ஜெட் படங்களுக்கு, பழைய கதைகளுடன், பெண்களை துரத்துவது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது, மிகையான ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றுக்கு இந்த அளவிலான விமர்சனங்கள் யாரும் செய்யவில்லை.

கங்குவாவின் நல்ல அம்சங்களை என்ன செய்வது? இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சி மற்றும் கங்குவாவிற்கு இளம்பெண்ணின் காதலும் துரோகமும் போன்றவை? விமர்சனங்களில் அவர்கள் நல்ல பகுதிகளை மறந்துவிட்டதாக நினைக்கிறேன்.

இதெல்லாம் எனக்கு மிகப்பெரிய கேள்வி எழுப்புகிறது, நம்மால் எப்போது உண்மையாகவே இந்த விமர்சனங்களை படிக்கவும் கேட்கவும் நம்பவும் முடியும் என்று! கங்குவா முதல் நாள், முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவ்வளவிற்கும் இந்த படம் ஒரு முழுமையான பாராட்டிற்கு தகுதியான படமாக இருந்தபோதும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.கங்குவா குழுவே பெருமைப்படுங்கள், ஏனெனில் எதிர்மறையான கருத்து கூறுகிறவர்கள் சினிமாவை முன்னேற்ற இதைத் தவிர வேறொன்றும் செய்து கொண்டிருப்பதில்லை!

என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தவர் நீங்கள்: அருண் விஜய் எழுதிய கடிதம்..!

Quick Share

என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தவர் நீங்கள் என பிரபல இயக்குனருக்கு நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சியுடன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். 

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!

இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 

மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்…

உங்கள் அருண் விஜய்.

ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது? ஏஆர் ரஹ்மான்

Quick Share

மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் இருந்து தொடங்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஏஆர் ரஹ்மான் எழுதி இயக்கிய ’Le Musk’ என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜி திரைப்படத்திற்கு சென்னை ஐஐடி விருது வழங்கிய நிலையில் இதுகுறித்த விழாவில் அவர் பேசியதாவது:

“உலக தரத்தில் ஒரு விர்ச்சுவல் திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதற்காக, அந்த படத்திற்கு விருது கிடைத்ததற்காக, அதுவும் நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் 37 நிமிடங்கள் படம் பார்த்தவர்கள் 10 நிமிட படமா என கேட்டனர். அந்த அளவுக்கு அனைவரும் படத்தை ரசித்தனர்.

இந்தியாவிலிருந்து ஏன் ஒரு ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கக்கூடாது? தொழில் வளர்ச்சி என்பது நம் நாட்டிற்கு மிகவும் அவசியம். புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும்.

VR என்பது வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழில்நுட்பம். இதன் மூலம் கோயில்களை சுற்றி பார்க்கலாம், கல்யாண நிகழ்ச்சிகளை உணர்வு பூர்வமாக ரசிக்கலாம். நம் நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் இசை மூலம் மனிதனுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சியும் வளர்ந்து வருகிறது. கற்பனைக்கு கட்டுப்பாடுகள் இல்லை,” என்று அவர் கூறினார்.

அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.


அடுத்த மாதம் நடக்கப்போகும் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் “இது என்ன மாயம்” என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.  

இதன் பின்னர் பைரவா, ரஜினி முருகன், மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெறி மற்றும் பேபி ஜான் படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் திகதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்று தற்போது இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாப்பிள்ளையின் பெயர் ஆண்டனி தட்டில். கேரளாவைச் சேர்ந்த இவர் துபாயில் வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. 

15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இவர்கள் இந்த மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இதுவரை எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.          

தனுஷ் இப்படிப்பட்ட மோசமான ஆளா…பகிரங்கமாக குற்றம் சுமத்திய நயன்தாரா!!குவியும் லைக...

Quick Share

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான அவரது பதிவுக்கு பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக தனுஷுடன் நடித்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனுஷுக்கு எதிராக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கவுரி கிஷன், காயத்ரி ஷங்கர், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர். இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம்உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம். இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும்.

தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கான அனுமதிக்காக வேறு பல தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அனுமதித்தார்கள். அப்போதுதான், உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், காலங்களை கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

‘நானும் ரௌடிதான்’ வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்துகொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது. அந்தப் படத்தின் வெற்றி, உங்களை உளவியல் ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். பின்னர், சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது.

எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களை செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்களின் வெற்றியை எந்த கோபமும் இல்லாமல், சமாதானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தின் வாயிலாக வேண்டிக் கொள்கிறேன்.

இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது.

அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் “Schadenfreude” எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

“மகிழ்வித்து மகிழ்” என்பதே உண்மையான மகிழ்ச்சி. கொண்ட்டாட்டங்கள் நிறைந்த இந்த வாழ்வை எல்லோரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதையே எனது குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டே ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒருமுறை பார்த்தால், உங்கள் எண்ணங்களும் நேர்மறையாக நிச்சயம் மாறும். எல்லா மேடைகளிலும் 

நீங்கள் சொல்லும் “Spread Love” என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

ஓம் நம் சிவாயா என அந்த கடிதத்தில் நயன்தாரா தெரிவித்துள்ளார்

`உங்கள் கணவர் செய்தது எந்த வகையில் நியாயம்?’ – கொட்டிதீர்த்த இசையமைப்பாளர்....

Quick Share

நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையும் விக்னேஷ் சிவனின் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியிருக்கும் நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்.

அவரது அறிக்கையில், “திருமதி நயன்தாரா அவர்களுக்கு வணக்கம்.

மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் திரு. தனுஷ் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் திரு. விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த திரு.விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.

“என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு திரு.விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், ‘உன்னால் என்ன பண்ண முடியும்’ என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் திரு.விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்.

உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.

“இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது. எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதி யோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எஸ்.குமரன் பூ, களவாணி உள்ளிட்டத் திரைப்படங்களின் இசையமைப்பாளர். 3 படங்கள் இயக்கியுள்ள இவர், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

10 கோடி கேட்ட கிளிப் இதுதான்.. அன்பை பரப்புங்கள் சார்.. நயனை அடுத்து பதிலடி கொடுத்த விக...

Quick Share

நயன்தாராவின் திருமண வீடியோ Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், அதில் மூன்று நொடிகள் கொண்ட காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் தரப்பில் 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாக நயன்தாரா ஆதங்கத்துடன் குற்றம்சாட்டி இருந்தார்.

இதனை அடுத்து அவர் மூன்று பக்க கடிதத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குள்ளான அந்த காட்சியை பகிர்ந்து, “இந்த சிறிய காட்சிக்கு தான் 10 கோடி ரூபாய் கேட்டார்கள், அதை இங்கே இலவசமாக பாருங்கள். அன்பை பரப்புங்கள் சார்” என்று தனுசை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஹரிஷ் கல்யாணுக்கு 34 வயது.. அவரது மாமியாருக்கு 33 வயது.. எப்படி ஒப்புக்கொண்டார்?

Quick Share

சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய, தற்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடித்தவருக்கு ஹரிஷ் கல்யாணை விட ஒரு வயது குறைவு என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’லப்பர் பந்து’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடிக்க, பிரபல நடிகைகளிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் மாமியார் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பதை எடுத்து, எனக்கு அந்த கேரக்டர் வந்தது என்றும் ’லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து தினேஷ் ஜோடியாக நடித்த அசோதா என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஸ்வாசிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறேன், உண்மையிலேயே அந்த கேரக்டர் எனக்கு எதிர்பாராத பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும், இந்த கேரக்டர் கிடைத்தது எனக்கு ஒரு வரம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடிக்க வேண்டுமா என்று மற்ற நடிகைகள் போலவே நானும் சிறிது யோசித்தேன், ஆனால் அந்த அசோதா கேரக்டர் என்னை என்னவோ செய்ததால் நான் ஒப்புக்கொண்டேன், தற்போது குவிந்து வரும் பாராட்டை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பாக பா ரஞ்சித், மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் வயது 34 என்ற நிலையில், அவரது மாமியாராக நடித்த ஸ்வாசிகாவுக்கு வயது 33 தான் என்பது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website