உஸ்பெகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காவில் 3 வயது மகளை கரடி குழிக்குள் தூக்கி எறியப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இருக்கும் மிருகக்காட்சிசாலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிபவான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், கரடியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் தனது 3 வயதே ஆன பெண் குழந்தையை கரடி இருக்கும் வேலிக்குள் சுமார் 16 அடி கீழே உள்ள குழியில் வீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
அப்போது, கீழே விழுந்த குழந்தையை நோக்கி வேகமாக ஓடிய பெரிய கரடி, குழந்தையை மோப்பம் பிடித்துள்ளது.
அதற்குள் அங்கு வேடிக்கை பார்க்கவந்த மக்கள் கத்தி கூச்சலிட, மிருகக்காட்சிசாலைக்காரர்கள் விரைந்து சென்று கரடியை திசை திருப்பி கூண்டு இருக்கும் பகுதிக்குள் விரட்டியுள்ளனர். பின்னர் குழந்தையை காப்பாற்றி தூக்கிச்சென்றனர்.
குழந்தைக்கு கரடியினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனால், கீழே வீசப்பட்டதன் விளைவாக மூளையதிர்ச்சி ஏற்பட்டதாகவும் மற்றும் ஓரிரு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளார். அவரது நோக்கம் என்ன என்பது முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை என்று மிருகக்காட்சிசாலையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.