கிரைம்

அரசு அதிகாரியின் கொடூரம்!!மனசாட்சி இல்லையா? 2 கி.மீ தூரம் தவழ்ந்து சென்று பென்சன் வாங்க...

Quick Share

80 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய மாநிலமான ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய பென்ஷன் பணத்தை வாங்குவதற்காக நடக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தவழ்ந்தே சென்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி பதூரி. இவர் மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதிய பணத்தை பெற்று வந்துள்ளார்.

இதனிடையே, வயது மூப்புடையவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்குச் சென்று ஓய்வூதியத்தை பணத்தை கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு இருக்கையில் ரைசுவான் கிராம பஞ்சாயத்து அதிகாரி, இந்த மூதாட்டியை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து பென்சன் தொகையை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் மூதாட்டி பதூரி, தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை தவழ்ந்து சென்று பென்ஷன் பணத்தை வாங்க கிளம்பியுள்ளார். இவரது வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக்குறைவாலும் இவரால் நடக்க முடியவில்லை.

தற்போது, மூதாட்டி தவழ்ந்து செல்லும் வீடியோ வெளியானதால், அடுத்த மாதத்தில் இருந்து அவரது வீட்டிற்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட BDO அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

2 சிறுமிகளை கர்ப்பமாக்கிய வாலிபர்கள் மீது போக்சோ!

Quick Share

திருப்பூர் சாந்தி திரையரங்கம் பின்புற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (21). பவானியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இதன் மூலம் தற்போது சிறுமியின் 4 மாதம் கர்ப்பமானார். இதனையறிந்த சைல்டு லைன் அமைப்பினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஈரோடு மரப்பாலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஈரோடு பகுதி 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இதன் மூலம் அந்த சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் அனுப்பினர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மீது சிறுநீர் கழித்த பயங்கரம்

Quick Share

கர்நாடக அரசு பேருந்தில் கொடூரம் அரங்கேறியுள்ளது. பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணி மீது ராமப்பா (25) என்ற வாலிபர் சிறுநீர் கழித்துள்ளார். விஜயபுராவில் இருந்து மங்களூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹுப்பள்ளி அருகே உள்ள கீரேசூரில் உள்ள தாபாவில் பேருந்து நின்றது. அப்போது ஒரு பெண் மீது ராமப்பா சிறுநீர் கழித்துள்ளார். பெண் அலறியதும் பேருந்தில் இருந்த பயணிகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் வந்து குற்றவாளியை அடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

பெண் காவலரை பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்

Quick Share

மேற்கு வங்க மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. எல்லைப் புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பிஎஸ்எப் இன்ஸ்பெக்டரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூரம் பிப்ரவரி 19 அன்று நடந்தது. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை: வாலிபருக்கு வலைவீச்சு!

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த போது மாணவிக்கு திடீர் வயிற்றுவலி எனத் துடித்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் மாணவியை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சிலேயே மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பிறகு மாணவி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், ‘எங்கள் ஊரைச் சேர்ந்த திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான ந. சிலம்பரசன் என்பவர் சுயஉதவிக்குழு வசூலுக்கு தன் வீட்டிற்கு வரும் போது ஆள் இல்லாத நேரத்தில் என்னை மிரட்டி இணங்க வைத்துவிட்டார். இந்த குழந்தைக்கு அவரே காரணம்’ என்று கூறியுள்ளார்.

மாணவியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலிசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்திற்குக் காரணமான சிலம்பரசனை தேடி வருகின்றனர். பள்ளி மாணவி கர்ப்பமாகி குழந்தை பிறந்தது அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறுமி கர்ப்பமாக இருந்தது பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் எப்படித் தெரியாமல் இருந்தது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது போலச் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி மோசம் செய்யும் இது போன்ற நபர்களுக்குச் சரியான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

ஒரே நாளில் 1000 தடவை அழைப்பு: காதலனை தொல்லை செய்த பெண்ணுக்கு சிறை!

Quick Share

பிரித்தானியாவில், முன்னாள் காதலனுக்கு ஒரே நாளில் 1000 தடவை அழைப்பெடுத்து தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபி கால்வில் [Sophie என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். எனினும் டேவிட் அவருடைய அழைப்பைத் தவிர்த்த நிலையில் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார்.

சோபியின் செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சோபிக்கு 1 வருடச் சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேரதிர்ச்சி!! மனைவியை வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்த கணவன்: சுவிட்சர்லாந்தில் பயங்கரம்!

Quick Share

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக் கொடூரமான ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது . மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்ற கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் என்பவரே இவ்வாரு கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிஸ் சுவிட்சர்லாந்து இறுதிச் சுற்று வரை சென்ற கிறிஸ்டினா இவரைக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய அவரது கணவர் தாமஸ், உடல் பாகங்களை எல்லாம் கெமிக்கல் மூலம் கரைத்துள்ளார். 38 வயதான முன்னாள் மாடல் கிறிஸ்டினாவின் உடலின் சில பாகங்கள் கடந்த பிப்ரவரி 13ம் திகதி பாசலுக்கு தென்மேற்கே சுமார் 3 கிமீ தொலைவில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது 41 வயது கணவர் தாமஸ் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தன்னை விடுவிக்க வேண்டும் என்று தாமஸ் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், இவ்வளவு கொடூரமாகத் தனது மனைவியைக் கொலை செய்த இந்த கொடூரனை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

தாமஸ் தனது வாக்குமூலத்தில் மனைவியை கொன்றமை தொடர்பில் விவரித்தமை பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பின்னர் லான்டரி அறைக்கு (துணி துவைக்கும் மெஷின்கள் இருக்கும் ரூம்) மனைவியின் உடலை இழுத்துச் சென்று அங்கு ஜிக்சா, கத்தி மற்றும் தோட்டத்தில் செடிகளை கட் செய்ய உதவும் கத்திகளைப் பயன்படுத்தி மனைவியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

கிறிஸ்டினா உடலின் சில பாகங்களை மிக்ஸியில் போட்டும் தாமஸ் அரைத்து சில பாகங்களை கெமிக்கல் போட்டும் கரைத்துள்ளமை நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் தற்காப்புக்காகவே தனது மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றதாக தாமஸ் கூறுகிறார். மனைவி கிறிஸ்டினா தன்னை கத்தியால் குத்த வந்ததாகவும் இதன் காரணமாகவே கொலை செய்ய நேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தாமஸ் மன நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லும் மருத்துவர்கள், கொடூரமான குற்றங்களைச் செய்யும் சாடிஸ்ட் மனநிலை தாமஸுக்கு அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைக்கு முன்பும் கூட தாமஸ் முன்பே ஒரு முறை தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றுள்ளமையும் என்பதும் விசாரணையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘சடலமாக தாய்; பள்ளியில் இருந்து காணாமல் போன குழந்தை’ – வழக்கில் திடீர் திருப்பம்!

Quick Share

நாகை மாவட்டம் கரியாப்படினத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மனைவி நீலாவதி. இவர் கணவரைவிட்டுப் பிரிந்து வந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரசேகரனுடன் சென்று விட்டார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வாடகை வீட்டில் 7 வயது பெண் குழந்தையுடன் தங்கி இருந்த நீலாவதி (வயது 28) தங்கி இருந்தார். மணமேல்குடியில் தங்கியிருந்த நீலாவதி வீட்டிற்கு சந்திரசேகரும், கோட்டைப்பட்டனத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்ற நபரும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

சம்பவ நாளான செவ்வாய்க்கிழமை காலை அருண்பாண்டியன் நீலாவதியின் மகள் குசினியைப் பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். மதியம் பள்ளிக்கு வந்த சந்திரசேகர் கனிசினியின் சித்தப்பா என்றும் நீலாவதிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவமனைக்குப் போக வேண்டும் ஆகவே கனிசினியை அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மாலை வரை நீலாவதி வீட்டில் நடமாட்டம் இல்லை, சிறுமி கனிசினியும் வீட்டில் காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் நீலாவதி வீட்டிற்குச் சென்று பார்த்தனர்.

அப்போது வீடு பூட்டி இருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்த போது தலையில் ரத்த காயங்களுடன் கழுத்தில் சேலையால் இறுக்கப்பட்டு நீலாவதி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே போலிசாருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுக்க கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மணமேல்குடி போலிசார் நீலாவதி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) பிரேதப் பரிசோதனை செய்து நீலாவதி உடலை அவரது தாய் கத்தரிப்புலம் பனையடிகுத்தகை புஷ்பவள்ளியிடம் ஒப்படைத்தனர். மகள் சடலத்தைச் சொந்த ஊருக்கு கொண்டு போக விரும்பாத புஷ்பவள்ளி புதுக்கோட்டை போஸ்நகர் மின் மயானத்தில் தகனம் செய்தார். இந்த நிலையில் பள்ளியில் இருந்து சிறுமியை அழைத்துச் சென்றது யார் என்று பள்ளியில் விசாரித்ததுடன் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து சந்திரசேகர் தான் குழந்தையை அழைத்துச் சென்றது என்பது தெரிய வந்தது. மேலும் தான் அழைத்துச் சென்ற சிறுமியை பனையடிகுத்தகையில் அவரது பாட்டி வீடு அருகே இறக்கி விட்டுச் சென்றவர் செல்போனை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார் என்று போலிசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஜாம்புவானோடை கிராமத்தில் காட்டுப் பகுதியில் ஒருவர் உயரமான மரத்தில் தூக்கில் சடலமாக தொங்குவதாக முத்துப்பேட்டை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பின்னர் அங்கு சென்று பார்த்த போது அந்த நபர் மணமேல்குடி போலிசாரால் தேடப்பட்டு வரும் சந்திரசேகரன் என்பது தெரிய வந்தது. சடத்தை மீட்ட போலிசார் பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிசார் கூறும் போது, “நீலாவதியின் கணவர் விஜயகுமாரின் உறவினரான சந்திரசேகர் அடிக்கடி நீலாவதி வீட்டிற்குச் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு கடந்த 2021 இல் நீலாவதி தனது மகளுடன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது கரியாபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு நீலாவதி மற்றும் அவரது மகளை மீட்ட போலிசார் நீலாவதியின் அம்மா புஷ்பவள்ளியிடம் ஒப்படைக்க மீண்டும் சந்திரசேகருடன் சென்று மணமேல்குடியில் தங்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் அருண்பாண்டியனுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரசேகருக்கும் நீலாவதிக்கும் பிரச்சனை ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இந்தநிலையில் தான் நீலாவதி கழுத்து இறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்தது. அவரது மகளை சந்திரசேகர் அழைத்துச் சென்று நீலாவதி தாயார் வீடு அருகே விட்டவர் தன்னை போலிசார் தேடுவது தெரிந்து சொந்த ஊரான ஜாம்புவானோடை சென்றவர் காட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்” என்றனர். மேலும் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை அறிய நீலாவதி வீட்டிற்கு அன்று காலை வந்து சென்ற கோட்டைப்பட்டினம் அருண்பாண்டியனிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். போலிசாரால் தேடப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஊழியரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற கும்பல்!

Quick Share

உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட வெயிட்டரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு காரில் வந்து 3 பேர் சாப்பிட்டுள்ளனர். பின்பு, வெயிட்டரை அழைத்து பணம் கொடுப்பதற்காக UPI QR code ஸ்கேனரை கொண்டு வருமாறு கூறினர்

பின்னர், அவர் வருவதற்குள் சென்று விடலாம் என்று நினைத்த மூவரும் காரில் ஏறி தப்ப முயன்றனர். ஆனால், அவர்கள் காருக்குள் ஏறும் சமயத்தில் வெயிட்டர் அங்கு சென்று பில்லை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை பிடித்தபடி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், காரை நிறுத்தி அவரை துன்புறுத்திய பின் வெயிட்டரின் பையில் இருந்த ரூ.11,500 பணத்தையும் எடுத்துள்ளனர். இதன்பிறகு, அவரது கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது தொடார்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் தப்பிச் சென்ற மூவரையும் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மனைவியை வைத்து சூதாடிய கணவன்: 7 ஏக்கர் நிலம், நகைகள் பறிப்போன அவலம்!

Quick Share

இந்தியாவில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த கணவர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், இறுதியில் தன்னுடைய மனைவியை வைத்தே சூதாடியுள்ளார். மனைவியை வைத்து சூதாடியதோடு தன்னுடைய மனைவியை நண்பர்கள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்யவும் அனுமதித்துள்ளார்.

கணவனின் கொடூர செயல்களை தடுக்க மனைவி முயன்ற போது, அவருடைய கை விரல்களை உடைத்து சித்திரவதையும் செய்துள்ளார்.

தன்னுடைய கணவர் தீவிரமான மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் மூழ்கி கிடப்பதாகவும், இதனால் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் ஆகிய பல பொருட்களை இழந்து இருப்பதாகவும் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனைவியை வைத்து சூதாடிய கணவன் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்: சிறுவன் மரணம்!

Quick Share

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், சரன் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் கிருஷ்ண குமார் (15). இந்த சிறுவனுக்கு பலமுறை வாந்தி வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுவனின் பெற்றோர் சரன் நகரில்உள்ள கணபதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அஜித் குமார் புரி என்ற மருத்துவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

பின்னர், சிறுவனுக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் தான் வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படுவதாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதனால், அந்த மருத்துவர் பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே யூடியூப் பார்த்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர், சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் சிறுவன் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலி மருத்துவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

காணாமல் போன சிறுவன் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் ...

Quick Share

முன்பகையின் காரணமாக பக்கத்து வீட்டில் உள்ள 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக மாவட்டமான திருநெல்வேலி, ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு 3 வயதில் மகன் ஒருவர் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த இவருடைய மகனை காணவில்லை என்று தேடியுள்ளனர். தொடர்ந்து ஒரு மணி நேரமாக தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர், குழந்தையை காணவில்லை என்று அவரது பெற்றோர் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தை எதிர்வீட்டிற்கு சென்றதாக சிலர் கூறியுள்ளனர்.

அப்போது, எதிர்வீட்டு பெண்மணி தங்கத்திடம்(40) பொலிஸார் விசாரணை செய்தனர். அப்போது அவர் முரணாக பேசியதால் விசாரணையை தீவிரப்படுத்திய போது சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதாவது அந்த பெண், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சாக்குமூட்டையில் கட்டி, வாஷின் மெஷினுக்குள் மறைத்து வைத்துள்ளார்.

பின்னர், சிறுவனின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சிறுவனை கொலை செய்த தங்கம் என்ற பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதில் முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் 15 வயது மகன் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்துள்ளார்.

இதில், எதிர்வீட்டு விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம் குடும்பத்திற்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனால், அவர்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிறுவனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.




You cannot copy content of this Website