கிரைம்

டெலிகிராமில் முதுநிலை நீட் வினாத்தாள் கசிவா?- தேசிய தேர்வு வாரியம் கொடுத்த விளக்கம்!

Quick Share

இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் எழுந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதேநேரம் ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு சர்ச்சைகள் காரணமாக தேர்வுநாள் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ‘NEET PG Leaked Materials’ என்ற பெயரில் டெலிகிராம் சேனல் ஒன்று செயல்படுவதாகவும், அதில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எடுத்துள்ளது.

ரூபாய் 70 ஆயிரம் வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராம் குழுவில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது. டெலிகிராம் செயலியில் இதுபோல் நூற்றுக்கணக்கான சேனல்களில், நீட் வினாத்தாள் வழங்கப்படும் என்ற தகவல்கள் பகிரப்படுவது முறையாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் தேசிய தேர்வு வாரியம் விளக்கம் வெளியிட்டுள்ளது. ‘டெலிகிராம் சேனலில் முதுநிலை நீட் வினாத்தாள் வெளியானது போன்ற போலி செய்திகளை நம்ப வேண்டாம். தேர்வுகளை ஏமாற்றும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளது.

அதே நேரம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடும் பஸ்சில் அரங்கேறிய அநியாயம்..வாயில் துணிவைத்து அடைத்து பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்...

Quick Share

திங்கள் கிழமை (ஜூலை 29) தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்திலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் பகுதிக்கு சென்ற தனியார் பேருந்தில் பயணித்த 26 வயது பெண்ணை, அந்த பேருந்தில் பயணித்த இரண்டு ஓட்டுனர்களில் ஒருவர், பயணிகள் அனைவரும் இருக்கும்போதே வாயில் துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்துள்ளார். பெண் அளித்த புகாரின்பேரில் பஸ்ஸை வழிமறித்த போலீசார் தப்பிச்சென்ற ஓட்டுநர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அரசு பள்ளியில் மாணவர்கள் விசிறி விட பாய் போட்டு படுத்து தூங்கிய ஆசிரியை-வைரலாகும் சர்ச...

Quick Share

உத்தர பிரதேசத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியை, குழந்தைகளை விசிறியால் வீச செய்து, வகுப்பறையில் பாய் போட்டு படுத்து துாங்கிய, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது. அலிகார் மாவட்டம் கோகுல்புர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மதிய உணவு இடைவெளியின் போது மாணவர்களை வீசிறியால் வீச சொல்லிவிட்டு, ஆசிரியை டிம்பிள் பன்சால் பாய் போட்டு ஹாயாக படுத்துறங்கி உள்ளார். இதையடுத்து, இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவ ஆசிரியை டிம்பிள் பன்சால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான 4 மாதங்களில் 21 வயது புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! கதறும் தாய்

Quick Share

தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம் செய்த இளம்பெண்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பாட்டியைச் சேர்ந்தவர் நித்யா. 21 வயதான இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் (23) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் நித்யா தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். 

காலையில் எழுந்த தினேஷ் மனைவி சடலமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பிரேத பரிசோதனை

பின்னர் தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், நித்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில் தினேஷிற்கும், நித்யாவிற்கும் இடையே கடந்த ஒரு மாதமாக தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் நித்யா இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கடவுளே ஏன் இந்த கொடுமை!!பெரும் சோகம்.. தலைகள் துண்டிக்கப்பட்டு முதலைகளுக்கு இரையாக்கப்...

Quick Share

பப்புவா நியூ கினியில் நடந்த மிக மோசமானப் படுகொலை சம்பவத்தில் குறைந்தது 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பலரது சடலங்கள் முதலைகளுக்கு இரையானதாக வெளியான தகவலை அடுத்து, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தீவு நாட்டின் கிழக்கு Sepik பிராந்தியத்திலேயே பீதியை ஏற்படுத்தும் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

16 சிறார்கள் உட்பட 26 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் மூன்று கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து, 200க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தஞ்சம் புகுந்தனர்.

ஜூலை 16 மற்றும் 18 திகதிகளில் நள்ளிரவில் கிராமங்களுக்குள் புகுந்து வாள், கோடரி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதல் முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் 30 பேர்கள் கொண்ட இளைஞர்கள் என்றும், அவர்கள் இதுவரை பொலிசாரிடம் சிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்லது.

ஆனால் தாக்குதல் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையிலேயே சம்பவயிடத்திற்கு பொலிசார் சென்று விசாரணை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தாக்குதல் நடத்திய அந்த 30 பேர்களில் பெரும்பாலானோரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடந்த சம்பவத்தை விவரிக்க முடியாமல் பலர் வாய்விட்டு கதறியுள்ளனர். தாக்குதல்தாரிகள் மிருகத்தனமாக நடந்துகொண்ட நிலையில், பெண் ஒருவர் நதியில் குதித்து, பல மணி நேரம் வெள்ளத்தில் தத்தளித்து, உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.

பலர் தலை துண்டிக்கப்பட்டு இறந்துள்ளனர். சிலரது சடலங்கள் நதியில் தள்ளப்பட்டு, முதலைகளுக்கு இரையானதாக கூறப்படுகிறது. எஞ்சிய சடலங்கள் தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியில் 800க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகள் பேசப்படுகிறது. தனி நபர்களைக் காட்டிலும் பழங்குடியினர் பெரும்பான்மையான நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகின்றனர்.

மட்டுமின்றி, வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாததால், இது போன்ற மோதல்கள் தொடர்கதையாக உள்ளது என்றே கூறுகின்றனர்.

வீட்டுப்பாடம் எழுதாததால் அடித்து பல்லை உடைத்த ஆசிரியர்: மயங்கி விழுந்த மாணவன்

Quick Share

உத்திரபிரதேசம் – ரேபரேலி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவரின் வீட்டுப்பாடம் செய்துவராததால் மாணவரை தாக்கி பற்களை உடைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் குறித்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை காரணமாக அநேகமான வீட்டு பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாணவர்களும் வீட்டு பாடங்களை செய்து வருவது கட்டாயமானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் இனைவரும் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். தொடர்ந்து அறிவியல் ஆசிரியர், வீட்டுப்பாடங்களை சரி திருத்துவதற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் வீட்டுப் பாடம் எழுத முடியவில்லை என்று மாணவர் தெரிவித்த நிலையில் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், மாணவரின் வாய் மற்றும் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் மாணவரின் பல் உடைந்த நிலையில், தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், பாடசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக சக மாணவர்கள் பாடசாலை முதல்வரிடம் தெரிவிக்க மயக்கமடைந்த மாணவரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்போது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்துடன் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு மாணவன் வீடு திரும்பியுள்ளதாகவும் அந்நாட்டு உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரும் அதிர்ச்சி!! அமெரிக்காவில் வகுப்பறையில் மாணவருடன் உறவுகொண்ட 24 வயது ஆசிரியை!

Quick Share

அமெரிக்காவில் 24 வயது ஆசிரியை மாணவருடன் முறைகேடாக உறவுகொண்ட விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மின்னெசொடாயில் உள்ள பாடசாலை ஒன்றில் மாற்று ஆசிரியராக பணியாற்றியவர் கெய்ட்லின் தாவோ (24). இவர் 17 வயது மாணவர் ஒருவருடன் காலியான வகுப்பறையில் வலுக்கட்டாயமாக உறவுகொண்டுள்ளார்.

பின்னர் தப்பியோடிய அவருக்கு, மே மாதம் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கெய்ட்லின் மீது 4ஆம் நிலை குற்றவியல் பாலியல் நடத்தை குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலையில் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் கெய்ட்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு ஆறு மாதங்கள் வரை சிறையில் இருப்பார்.

அத்துடன் அவர் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும், அவரது தண்டனை செப்டம்பர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட உள்ளதாக தெரிய வந்துள்ளது

சாக்லேட் தருவதாக கூறி 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 57 வயது கொடூரன்!

Quick Share

வேலூர் காட்பாடியைச் சேர்ந்த அப்துல்கனி (57) என்பவர் கடந்த ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், அப்துல்கனிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிர்ச்சி சம்பவம்! சிறுமியை நாசம் செய்த 6 இளைஞர்கள்…

Quick Share

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை, ஆறு இளைஞர்களால் ஒன்று சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த சிறுமியை அங்கையே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர், அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் முக்கிய குற்றவாளியை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமைறவான மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்!

Quick Share

கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார். இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இதில், சுனிலுக்கு திருமணத்தின் போதே வரதட்சணை கொடுக்கப்பட்டது. ஆனால், கூடுதலாக இன்னும் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுனிலின் சகோதரி மற்றும் குடும்பத்தினரும் வரதட்சணை வாங்கி வருமாறு பூஜாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பூஜா இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர், தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் தான் வரதட்சணை கேட்டு சுனில் கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவதாக பெண் குழந்தை.., விரக்தியில் அடித்து கொன்று பாறையில் வீசிய தந்தை

Quick Share

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்த விரக்தியில் பச்சிளம் குழந்தையை தந்தையே அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையை கொன்ற தந்தை

தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன். 

இவர் தனது முதல் மனைவி முனியம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

பின்னர், சின்னம்மா என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான சின்னமாவுக்கு 14 நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், குழந்தையை கொன்று விடலாம் என்று சின்னம்மாவிடம் மாதையன் கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடிவிட்டார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சின்னம்மா அவரை பின்தொடர்ந்து தேடிச் சென்றார்.

ஆனால், அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இரவு 9 மணிக்கு வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது குழந்தையை மாதையன் வீசி சென்றதை சின்னம்மா கவனித்துள்ளார். 

பின்னர், அங்கு சென்று கன்னத்தில் காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 

ஆனால், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்துவிட்டது என்று கூறியுள்ளனர். இதனை அறிந்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில், மாதையன் குழந்தையை அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொலிஸார் அவரை கைது செய்தனர்.   

விஷ வாயுவை சுவாசித்து 5 பேர் உயிரிழப்பு

Quick Share

சத்தீஸ்கரின் சம்பா மாவட்டத்தின் கிகிர்டா கிராமத்தில், இன்று (ஜுலை 5) கிணற்றில் இருந்து நச்சு வாயுவை சுவாசித்து 5 பேர் உயிரிழந்தனர். முதலில் கிணற்றில் விழுந்த பொருளைத் தேட இறங்கியவர் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற மற்ற நான்கு பேரும் இறங்கினர். அவர்களும் உயிர் இழந்தனர். கிணற்றில் இருந்து உடல்களை வெளியே எடுக்க பேரிடர் மீட்புக்குழு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.




You cannot copy content of this Website