மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரம்
கணவர் உதவியுடன் மாமனார் மற்றும் மைத்துனர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பரபரப்பு புகாரளித்துள்ளார். ராஜஸ்தானின் சுருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது புகாரளித்தார். இந்த சம்பவத்தில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 15 வருடங்களாக தனது கணவர் மயக்க மருந்து கொடுத்து வருவதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் கணவரும் மாமனாருடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் அந்த பெண்ணின் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாமனார் மற்றும் குடும்பத்தினர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தான் ஆட்சேபம் தெரிவித்தபோது, ஒருமுறை தனது கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும், பின்னர் ஓடிவிட்டதாகவும் அந்த பெண் கூறினார்.